பாலக்காடு : கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கோவை வாலிபரை, எட்டு ஆண்டுகளுக்கு பின், போலீசார் கைது செய்தனர். கோவை பேரூர் குப்பனூரை சேர்ந்தவர், சிவக்குமார் என்கிற செந்தில், 34. இவரை, சென்னை தொழிலதிபர் ஏழுமலை, 60, என்பரை கொலை செய்த வழக்கில், கடந்த 15ம் தேதி கிண்டி போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 2004ம் ஆண்டு, பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் கன்னியம்புரத்தில் வசித்து வந்த நடராஜன், 21, என்பரை கொலையில் தொடர்பிருந்தது தெரியவந்தது. போலீசார் கூறியதாவது: கவரிங் நகை விற்பனையை நடராஜன் செய்து வந்துள்ளார். இவர், நாகர்கோவிலில் இருந்தபோது, சிவக்குமாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து கன்னியம்புரத்துக்கு சிவக்குமார் அடிக்கடி வந்துள்ளார். நடராஜனிடம் இருந்த நகைகளை பார்த்து, அதை திருட திட்டமிட்டார். 2004ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி, கயிற்றால் கழுத்தை நெறித்து கொன்று, நகைகளை சிவக்குமார் திருடிச் சென்றார். இதற்கிடையே சென்னை சென்ற சிவக்குமாருக்கு, அங்கு தொழிலதிபர் ஏழுமலையின் தொடர்பு கிடைத்தது. அவரை தாக்கி, கொலை செய்து, ஐந்து பவுன் நகையை திருடியுள்ளார். இது தொடர்பான வழக்கில் சிவக்குமாரை கைது செய்து விசாரித்தபோது, பாலக்காட்டில் நடந்த கொலையில் தொடர்பிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.