Advertisement
நூற்பாலையில் தீ விபத்து ரூ.1 கோடி பஞ்சு எரிந்து சேதம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2013,01:40 IST

பல்லடம் : தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 1 கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சு பேல்கள், எரிந்து சேதமடைந்தன.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த ராயர்பாளையத்தில், கருப்பசாமி, 65, என்பவருக்கு சொந்தமான நூற்பாலை உள்ளது; 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நூற்பாலை வளாகத்தில் பஞ்சு பேல்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.
நூற்பாலை குடோனில், நேற்று மதியம், 12:00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. பஞ்சு பேல்கள் தீப்பிடித்து எரிவதை பார்த்த ஊழியர்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். பல்லடம் மற்றும் திருப்பூரில் இருந்து தீயணைப்பு வீரர்கள், நான்கு மணி நேரத்துக்கும் மேலாக போராடி, தீயை அணைத்தனர்.
குடோனின் மேற்கூரைகள், வெப்பம் தாங்காமல் வெடித்தன. குடோன் சுவற்றின் சில இடங்களை, பொக்லைன் வாகனம் மூலம் இடித்து, பஞ்சுகளை வெளியே எடுத்தனர். தீ அணைக்க உதவியாக, 30க்கும் மேற்பட்ட தனியார் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டது.
தீ விபத்தில், 1 கோடி ரூபாய்க்கும் மேல், பஞ்சு பேல்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பல்லடம் தாசில்தார் மற்றும் வருவாய்த் துறையினர், சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். விபத்துக்கான காரணம் குறித்து, பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.