Advertisement
பெண் வேடமிட்டு லாரி டிரைவரிடம் வழிப்பறி: தனிப்படைபோலீசார் தேடல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

ஆத்தூர் : ஆத்தூர் அருகே, புறவழிச் சாலையில், பெண் வேடமிட்டு வந்து, லாரியை வழிமறித்த கொள்ளை கும்பல், டிரைவரை தாக்கி பணம், நகையை பறித்து சென்றனர். அக்கும்பலை பிடிக்க, எஸ்.பி., தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், சொக்கலிங்கபுரம் பகுதியை சேர்ந்த, லாரி டிரைவர் காட்வின், 27. இவர், நேற்று முன்தினம் இரவு, சங்ககிரியில் இருந்து, புதுச்சேரிக்கு, சவுக்கு மரக் கட்டைகள் ஏற்றுவதற்காக, சேலம் - உளுந்தூர்பேட்டை நான்கு வழிச் சாலையில், ஆத்தூர் புறவழிச் சாலை வழியாக சென்றார்.
நள்ளிரவு, 12:45 மணியளவில், ஆத்தூர் அருகே, தென்னங்குடிப்பாளையம் பாக்கு தோப்பு எதிரே, பெண் ஒருவர், "டார்ச் லைட்' அடித்தபடி நின்றிருந்தார். லாரியை நிறுத்தி காட்வின், அங்கு சென்று பார்த்த போது, பெண் வேடமிட்டு, ஆண் ஒருவர் இருந்தது தெரிந்தது. தப்ப முயன்ற டிரைவரை, ஏழு பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்தது.
அவரை தாக்கி, சட்டையில் இருந்த, 2,000 ரூபாய், ஒரு சவரன் மோதிரம், லாரியில் இருந்த, 10 ஆயிரம் ரூபாய் பறித்து, ஆத்தூர் உப்பு ஓடை மேம்பாலம் வழியாக தப்பி ஓடினர்.
போலீசில் காட்வின் புகார் செய்ததை அடுத்து, சேலம் மாவட்ட எஸ்.பி., தலைமையில், 70 போலீசார், ஆத்தூர் புறவழிச் சாலை, ஆத்தூர் - பெரம்பலூர், ராசிபுரம் மாநில சாலை, சேலம் - உளுந்தூர்பேட்டை நான்கு வழிச் சாலைகளில், இரவு, 1:00 மணி முதல், நேற்று காலை, 7:00 மணி வரை, வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர்.
கொள்ளை கும்பல் தாக்கியதில் காயமடைந்த காட்வின், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொள்ளை கும்பலை பிடிக்க, எஸ்.பி., தலைமையில், ஐந்து தனிப்படை அமைத்து, தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.