மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம், வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே, பவானி ஆற்றில் மூழ்கி, இரண்டு வாலிபர்கள் பலியாகினர். கோவை,
கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ், 38; ரியல் எஸ்டேட் செய்து வருகிறார்.
நேற்று, இவர் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், கிடா வெட்டு
விருந்து வைத்தார். நேற்று காலை, கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சுனில்,
ஜெயகுமார், சூர்யா, ஆனந்த், சதீஷ், பிரதீப், 20 மற்றும் நல்லாம்பாளையத்தை
சேர்ந்த பாலகுரு, 21 உள்பட 11 பேர் மேட்டுப்பாளையம் சென்றனர்.
மாலை 3:00
மணியளவில், மேற்குறிப்பிட்ட அனைவரும், பவானி ஆற்றில் குளிக்க சென்றனர்.
அப்போது பிரதீப் மத்திமரத்துபாறை என்ற பகுதிக்கு சென்றபோது, தண்ணீரில்
மூழ்கினார். இதனை கண்ட, பாலகுரு அவரை காப்பாற்ற, அப்பகுதிக்கு சென்றார்.
ஆனால், அவரும் தண்ணீரில் மூழ்கினார். இதனைக்கண்ட கரையிலிருந்த
நண்பர்கள், அங்கிருந்த பரிசல்காரர்களிடம்," தங்களது நண்பர்களை யாரோ,
தண்ணீருக்குள் இழுத்துச் சென்றுவிட்டனர்,' எனக்கூறி, வாக்குவாதத்தில்
ஈடுபட்டனர்; கைகலப்பு ஏற்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு
வந்த தீயணைப்புத்துறையினர், இருவரது உடலையும் தேடியும் கிடைக்கவில்லை.
இதனிடையே, வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய
போலீசார் மற்றும் மேட்டுப்பாளையம் நகராட்சித் தலைவர் சதீஷ்குமார் ஆகியோர்,"
அப்பகுதியில், பரிசல்காரர்களால்தான், உடல்களை மீட்டு வர முடியும். அதனால்
பிரச்னை வேண்டாம்,' என, அறிவுறுத்தினர். இதனை நண்பர்கள்
ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து, பரிசல்காரர்கள் ஆற்றினுள் தேடி, 20
நிமிடங்களில், இருவரது உடலையும் மீட்டு வந்தனர். பலியான பாலகுரு,
கவுண்டம்பாளையத்தில் டீக்கடை நடத்தி வந்தார். பிரதீப், கல்லூரி மாணவர்
ஆவார். தொடர்ந்து இருவரது உடலும், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு
அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.