ஓசூர் : தளி
அருகே காதல் தகராறில், பள்ளி மாணவியின் பெரியப்பா அடித்துக் கொலை
செய்யப்பட்டார். மாணவியை கடத்திய டிராக்டர் டிரைவர் உள்ளிட்ட ஒன்பது பேரை,
போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த தளிகொத்தனூரை
சேர்ந்தவர், வெங்கடேஷ் கவுண்டர். இவரது மகன் கார்த்திக், மகள் ராணி, 14
(பெயர் மாற்றப்பட்டுள்ளது). பாலதோட்டனப் பள்ளி அரசு பள்ளியில், ஒன்பதாம்
வகுப்பு படிக்கிறார் ராணி.
ஆறு மாதங்களுக்கு முன், வெங்கடேஷ்,
குளிசாமனப்பள்ளியில், குடும்பத்தினருடன் குடியேறினார். ராணியும், அதே
கிராமத்தில், "காலனி' பகுதியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் மஞ்சுநாத், 22,
என்பவரும், காதலித்து வந்தனர். கடந்த, 3ம் தேதி வீட்டில் இருந்த ராணியை
காணவில்லை. அதிர்ச்சியடைந்த வெங்கடேஷ், அவரது அண்ணன் மாதேஷ், 45 மற்றும்
உறவினர்கள், பல்வேறு இடங்களில் தேடினர். கர்நாடகா மாநிலம், மரலவாடிக்கு
ராணியை, மஞ்சுநாத் கடத்தி சென்றது தெரிந்தது. நேற்று முன்தினம்,
பைக்குகளில் அங்கு சென்ற வெங்கடேஷ், மாதேஷ், அவரது உறவினர்கள்,
மஞ்சுநாத்தையும், ராணியையும் ஊருக்கு பஞ்சாயத்து பேச அழைத்து வந்தனர். தளி
ஏரிக்கரை அருகே வந்த போது, இரு டாடா சுமோக்களில் வந்த மஞ்சுநாத்தின் அண்ணன்
மாதேவன் மற்றும் உறவினர்கள், மஞ்சுநாத்தையும், ராணியையும் மீட்க
முயன்றனர், இதில், இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. மாதேஷின்
தலையில் உருட்டுக்கட்டையால் தாக்கியதால், அவர் மயங்கி விழுந்ததார்.
அதிர்ச்சியடைந்த மஞ்சுநாத் மற்றும் அவரது உறவினர்கள் அங்கிருந்து
தப்பியோடினர். காயம் அடைந்த மாதேஷை, தளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு
செல்லும் வழியில், அவர் இறந்தார். இதையடுத்து, தேன்கனிக்கோட்டை ஏ.எஸ்.பி.,
மற்றும் போலீசார், மஞ்சுநாத் உட்பட, ஒன்பது பேரை நள்ளிரவு கைது செய்தனர். சட்டவிரோதமாக
கூடுதல், களங்கம் விளைவித்தல், தடுத்து நிறுத்துல், தாக்குதல், கடத்தல்,
கொலை மற்றும் அறையில் அடைத்து பாலியல் குற்றம் புரிதல் ஆகிய, ஆறு
பிரிவுகளில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலை சம்பவம் நடந்த தளி,
குளிசாமனப்பள்ளி மற்றும் தளி கொத்தனூர் கிராமங்களில் முன் எச்சரிக்கை
நடவடிக்கையாக, எஸ்.பி., (பொறுப்பு) ஆஸ்ராகார்க், ஏ.எஸ்.பி., விஜயகுமார்
தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பா.ம.க.,வினர் தர்ணா
நேற்று
காலை, ஓசூர் அரசு மருத்துவமனையில் கொலை செய்யப்பட்ட மாதேஷ் உடல், பிரேத
பரிசோதனை செய்யப்பட்டது. அரசு மருத்துவமனை முன், பா.ம.க., முன்னாள்
எம்.எல்.ஏ., மேகநாதன், மாநில துணைத் தலைவர், மாவட்ட செயலர் மற்றும்
அக்கட்சியினர் குவிந்தனர்.
பிரேத பரிசோதனை முடிந்ததும், மாதேஷ் உடலை
போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் தளி, கொத்தனூருக்கு அனுப்ப முயன்றனர்.
ஆவேசமடைந்த, பா.ம.க.,வினர் ஆம்புலன்சை மறித்தனர். பெரும் போராட்டத்துக்கு
பின் போலீசார், ஆம்புலன்சை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.பின்னர்,
பா.ம.க.,வினர் மருத்துவமனை முன், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு
மணி நேரம் நீடித்த போராட்டத்தில், டி.எஸ்.பி., மற்றும் தாசில்தார் ஆகியோர்,
மாதேஷை தாக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதை கூறியதையடுத்து, அவர்கள்
கலைந்து சென்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.