ஈரோடு : குரூப்
- 2 தேர்வு வினாத்தாள் வெளியான வழக்கில், முதல் குற்றவாளியான சுவாமியை
கைது செய்ய, சி.பி.சி.ஐ.டி., போலீசார் ஒடிசாவில் முகாமிட்டுள்ளனர்.
தமிழகத்தில்,
2012 ஆக., 12ம் தேதி நடந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 தேர்வில், 6.40
லட்சம் பேர் தேர்வு எழுதினர். ஈரோடு, தர்மபுரி மாவட்டம் அரூரில்
வினாத்தாள் வெளியானதால், தேர்வு ரத்தானது. ஈரோடு டவுன் போலீசார்
வழக்குப் பதிந்து, செந்தில், தனக்கொடி, சென்னை பாலன் என்ற ஸ்ரீதர்ராஜ்
உட்பட, 11 பேரை கைது செய்தனர். வினாத்தாள் வழங்கியதாக, ஆந்திராவை சேர்ந்த,
ரயில்வே ஊழியர் ஆனந்தராவ், விசாகப்பட்டினத்தில் கைது செய்யப்பட்டார்.
அதற்குள்
இவ்வழக்கு, கோவை, சி.பி.சி.ஐ.டி., போலீசுக்கு மாற்றப்பட்டது. பின்,
ஒடிசாவை சேர்ந்த ஹகன் மற்றும் அச்சக ஊழியர் கோத்ரா மோகன் நந்தன் ஆகியோர்
கைது செய்யப்பட்டனர்.
நவ., 13ம் தேதி, குரூப் - 2 விவகாரத்தில் கைது
செய்யப்பட்ட, செந்தில், தனக்கொடி உள்ளிட்ட, 11 பேருக்கு, ஈரோடு நீதிமன்றம்
ஜாமின் வழங்கியது. வழக்கில் திருப்பமாக, டிச., 9ம் தேதி, கடலூரை சேர்ந்த
சிவகுரு; ஜன., 10ம் தேதி, சென்னை மடிப்பாக்கம், வெங்கடேஷ் ஆகியோர் கைது
செய்யப்பட்டு ஈரோடு சிறையில் உள்ளனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக
கருதப்படும், ஓய்வு பெற்ற, ரயில்வே ஊழியர் சுவாமியை, கைது செய்தால்
மட்டுமே, வழக்கு இறுதி கட்டத்தை எட்டும். போலீஸ் காவல் முடிந்து,
சிவகுரு, வெங்கட் ஆகியோர், சிறையிலுள்ள நிலையில், கோவை சி.பி.சி.ஐ.டி.,
போலீசார், சுவாமியை கைது செய்யும் நோக்கில், ஒடிசாவில் முகாமிட்டுள்ளனர். தலைமறைவாக
உள்ள சுவாமியின் உண்மையான பெயர், போலீசாருக்கும், வினாத்தாள்
வாங்கியவர்களுக்கும் தெரியவில்லை. அவரை பிடித்தால், பல தமிழக தலைகள்
சிக்கும் என, சி.பி.சி.ஐ.டி., போலீசார் எதிர்பார்க்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.