"காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை, மத்திய அரசிதழில், விரைந்து வெளியிட வேண்டும்' என, மத்திய, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர், வாசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர், டில்லியில் நேற்று, மத்திய நீர்வளத்துறை அமைச்சர், ஹரிஷ் ராவத்தை சந்தித்து பேசினார். அப்போது, காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியிட, இனியும் கால தாமதம் செய்ய வேண்டாம் என்றும், விரைவில் வெளியிட, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்டார். அதே போல், சட்ட அமைச்சர், அஸ்வினி குமாரையும் சந்தித்து, இதே கருத்தை, அமைச்சர் வாசன் வலியுறுத்தினார்.
- நமது டில்லி நிருபர்-