குன்னூர் : குன்னூரில், நள்ளிரவில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், நேற்று பகல், கடும் பனி மூட்டம் நிலவியது. நீலகிரியில் பொதுவாக நவம்பர், டிசம்பர் மாதங்களில், பனிப் பொழிவு ஏற்படும். துவக்கத்தில் நீர் பனிப் பொழிவு ஏற்பட்டு, மெல்ல மெல்ல வெப்பநிலை குறைந்து, உறை பனிப் பொழிவு ஏற்படும். கடந்தாண்டு முதல், கால நிலையில் மாற்றம் காணப்படுகிறது. வழக்கத்துக்கு மாறாக குன்னூரில், பனிப் பொழிவு அதிகரித்து வந்தது. இரவில் கடும் குளிர் நிலவியது. நேற்று முன்தினம் இரவு, குன்னூர் மற்றும் சுற்று வட்டாரங்களில், திடீரென கன மழை பெய்தது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. மழையால், சிம்ஸ் பூங்கா சுற்றுப்புற பகுதிகளில் மின் வினியோகம் தடைபட்டது. மின் வினியோகத்தை, ஊழியர்கள் நேற்று சீரமைத்தனர். மழை பெய்த சுவடு தெரியாமல்,நேற்று பகல், குன்னூர் நகரில் கடும் பனி மூட்டம் ஏற்பட்டது. மலைப் பாதையில் செல்லும் வாகனங்கள், பகல் நேரத்திலேயே, முகப்பு விளக்குகளுடன் ஊர்ந்து சென்றன. வித்தியாசமான சூழ்நிலை, சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.