லக்னோ
: உத்தர பிரதேசத்தில் நடந்த அரசு விழாவில், மாநில அமைச்சர், பெண்
அதிகாரியை வர்ணித்துப் பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உ.பி.,யில்,
அகிலேஷ் யாதவ் தலைமையில், சமாஜ்வாதி கட்சி ஆட்சி உள்ளது. இதில், கதர் துறை
அமைச்சராக இருப்பவர் ராஜ்ராம் பாண்டே. இரண்டு நாட்களுக்கு முன்,
சுல்தான்பூரில், வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும்
நிகழ்ச்சியில் பங்கேற்றார். விழாவிற்கு, சுல்தான்பூர் மாவட்ட கலெக்டர்,
தனலட்சுமி தலைமை தாங்கினார். விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்ராம் பாண்டே,
""இந்த மாவட்டம் மிகவும் அதிர்ஷ்டம் செய்துள்ளது; கலெக்டராக
பொறுப்பேற்றுள்ளவர் மிகவும் அழகாக உள்ளார்; கனிவாகப் பேசக்கூடியவர்; சிறந்த
நிர்வாகி,'' என பாராட்டினார்.அமைச்சரின் பேச்சைக் கேட்டு, விழாவில்
அதிகளவில் குழுமியிருந்த சமாஜ்வாதி தொண்டர்கள் கரவொலி எழுப்பினர். அப்போது,
மேடையில் அமர்ந்திருந்த கலெக்டர் தனலட்சுமி, செய்வதறியாது தர்ம
சங்கடத்தில் நெளிந்தார். ""பாண்டே பேச்சு, பொதுமக்கள் மத்தியில் தவறான
எண்ணத்தை ஏற்படுத்தும்; அது, கட்சிக்கும், அரசுக்கும் அவப்பெயரை
ஏற்படுத்தும்,'' என, சமாஜ்வாதி எம்.எல்.ஏ., ரவிதாஸ் மகோத்ரா கூறினார்.
கட்சியின் மூத்த தலைவர்களும், பாண்டே பேச்சால் கோபம் அடைந்து உள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.