திருவண்ணாமலை: தங்க செயினுக்கு பாலீஸ் போடுவதாக கூறி பட்டப்பகலில் மூன்று பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தை சேர்ந்த ராமன், மனைவி சித்ரா, 30. இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சித்ராவிடம் சென்று வெள்ளி நகைகளுக்கு பாலீஸ் போட்டு தருவதாக கூறினர், இதை நம்பிய சித்ரா, தனது வெள்ளி நகைகளை அவர்களிடம் கொடுத்தார், வெள்ளி நகைகளுக்கு பாலீஸ் போட்டு கொடுத்தனர்.
இதை தொடர்ந்து மர்ம நபர்கள் உங்களிடம் தங்க நகை இருந்தால் கொடுங்கள், அதற்கும் பாலீஸ் போட்டு கொடுக்கிறோம் என கூறினர், இதை உண்மை என நம்பிய சித்ரா பீரோவில் இருந்த மூன்று பவுன் நகையை கொடுத்தார்.
மர்ம நபர்கள் பாலீஸ் போட இட்லி குக்கர் வேண்டும் என கூறினர். சித்ரா வீட்டின் உள்ளே சென்று குக்கரை எடுத்து வந்து கொடுத்தார். குக்கரில் நகையை போடுவதைபோல் நடித்து விட்டு நகையை திருடி கொண்டனர்.
சித்ராவிடம் குக்கரை கொடுத்து சில நிமிடங்கள் கழித்து எடுத்து கொள்ளுங்கள் என கூறிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டனர். சில நிமிடங்கள் கழித்து குக்கரை திறந்து பார்த்தபோது உள்ளே மூன்று பவுன் நகை இல்லாததை கண்டு சித்ரா அதிர்ச்சி அடைந்தார். ஆரணி தாலுகா போலீஸார் விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.