Advertisement
திருடர்களை கண்டறிய பஸ்களில் ஆய்வு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2013,02:02 IST

சேலம்: சேலம் மாநகரப் பகுதிகளில், கடந்த சில மாதங்களில், திருட்டு, கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் அதிகளவில் நடந்துள்ளன. பெரும்பாலான திருடர்கள், இரவு நேரத்தில் டூ வீலரில் சென்று சம்பவத்தை நிகழ்த்தி விட்டு, காலையில் வழக்கம்போல் மக்களுடன் மக்களாக செல்கின்றனர். ஒரு சில திருடர்கள், கொஞ்சம் காலம், வெளிமாவட்டங்களுக்கு சென்று விடுகின்றனர்.
ஏற்கனவே, இத்தொழில் ஈடுபட்டுள்ளோரையும், வெளிமாவட்டங்களில் இருந்து சேலம் வரும் சந்தேகத்துக்குரிய நபர்களையும், ஒவ்வொரு பகுதி போலீஸ் ஸ்டேஷனில் உள்ள எஸ்.ஐ., போலீஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் மப்டியில் சென்று, பஸ்களில் ஆய்வு நடத்த வேண்டும். இதன் மூலம், போலீஸாருக்கு பயந்து பதுங்கும் நபர்களை அடையாளம் காண முடியும். சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில், காலை, மாலை, இரவு வேளைகளில் தொடர் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான உத்தரவை, ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும், போலீஸ் கமிஷனர் மஹாலி வழங்கியுள்ளார்.
இது குறித்து எஸ்.ஐ., ஒருவர் கூறியதாவது:
திருட்டு, வழிப்பறியில் தொடர்புடைய நபர்கள் அதிகளில் சுற்றிதிரிகின்றனர். இதற்காக, பஸ்களில் ஆய்வு நடத்துமாறு, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். நாங்களும் மப்டியில் சென்று, சந்தேகத்துக்குரிய நபர்களை கண்டறிந்து, அவர்களிடம் விசாரணை நடத்துகிறோம். போலீஸார் பற்றாக்குறையால், ஆயுதப்படையில் உள்ள போலீஸாரையும், இந்த ஆய்வில் பயன்படுத்திக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
babu - tiruchi,இந்தியா
09-பிப்-201309:46:09 IST Report Abuse
babu திருச்சி சேலம் பஸ்களில் இறங்கும் முன் பஸ்சில் அவசராவசரமாக் ஏறுவார்கள் பஸ்சில் இருப்பவர்கள் முதலில் இறக்கிய பின்னர் பஸ்சில் ஏற அன்ன்டுமதி க்க வேண்டும் ஆனால் பஸ் நிலையம் வரும் முன்னே பஸ் போர்டு மாற்றி விடுவார் கண்டக்டர் பயணிகள் இறங்கும் முன்னே இவர்கள் இறங்கி விடுவார்கள், டிரைவர் எங்காவது பஸ் நிறுத்தி இறங்கு என்பார், பயணிகள் இறங்குமுன் கீழிருக்கும் பயணிகள் ஒருவேளை திருடர்களும் சேர்ந்து பஸ்ஸில் ஏறுவார்கள், இறங்க வேண்டியவன் முதலா ஏறுபவன் முதலா இதனால் பெண்கள் குழந்தைகள் கஷ்டம், போலிசே அங்கு வர மாட்டார்கள் ஆனால் பஸ் நிலையத்துக்குள் பயணிகளே சற்று கண் அயர்ந்து விட்டால் குச்சி லத்தி வைத்து தான் தலையில் தட்டுவார்கள் வீரம் மிக்க இந்த போலீஸ் தான் அங்கு ரோந்து, பஸ் ஸ்டாப் அல்லாத பஸ் நிலையங்களில் ஆவது இறங்குவதற்கும் ஏறுவதற்கும் வசதியாக ஏற்படுத்தவேண்டும் ஒழுங்கு படுத்த வேண்டும், அல்லாது இவாருட் தான் அடி தடியாக இருக்கும் இது மக்கள் மீதான தவறு இல்லை பஸ் நிலையங்களின் பொறுப்பற்ற செயல் சமுக விரோதிகளுக்கு வசதியான இடம்,
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.