புதுச்சேரி : சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை, வரும், 13ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது . காஞ்சிபுரம், வரதராஜப் பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை, புதுச்சேரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட, 24 பேர் மீது, குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களின் வாதம் நிறைவு பெற்றதையொட்டி, அரசு சிறப்பு வழக்கறிஞர் தேவதாஸ், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக, கடந்த, 18ம் தேதி, பதில் விவாதத்தை துவக்கினார். 24ம் தேதியும், விவாதம் நடந்தது. இந்நிலையில், வழக்கை விசாரித்து வந்த முதன்மை அமர்வு நீதிபதி முருகன், விடுமுறையில் சென்று விட்டதால், இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி மோகன்தாஸ் முன்னிலையில், வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டுள்ள, 24 பேரில், சுந்தரேசன், ரகு உள்ளிட்ட, 7 பேர் மட்டும் ஆஜராகியிருந்தனர்; ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட, 17 பேர் ஆஜராகவில்லை. நீதிபதி மோகன்தாஸ், வழக்கு விசாரணையை, வரும், 13ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அரசு தரப்பில், வழக்கறிஞர் தேவதாஸ் ஆஜரானார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.