தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகள் வருகை அதிகரித்துள்ளது. அனைத்து மருத்துவ சிகிச்சையும் கிடைப்பதால், மக்கள் தனியார் மற்றும் வெளி மாவட்ட மருத்துவமனைகளுக்கு செல்வது குறைந்துள்ளது.
தர்மபுரி அரசு மருத்துவமனை கடந்த, 2000ம் ஆண்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனையின் உள் கட்டமைப்பு வசதிகள் கடந்த இரண்டாண்டில் செய்து முடிக்கப்பட்டன.
கடந்தாண்டு, 500 படுக்கைகள் கொண்டு விரிவுப்படுத்தப்பட்ட மருத்து உள் நோயாளிகள் பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கான கட்டிடங்கள் திறக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பச்சிளம் குழந்தைகளுக்கு தனி சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு, முதல்வரின் காப்பீடு திட்டத்துக்கான சிறப்பு பிரிவு, பிறவி காணுக்கால் முட நீக்க சிறப்பு பிரிவு, சித்தா பிரிவு என அனைத்துக்கும் தனித்தனி பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளது.
அதே போல் ஒவ்வொரு நோய்க்கு ஏற்ற சிறப்பு வார்டுகள், சி.டி.,ஸ்கேன், எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட தொழில் நுட்ப வசதிகளும் உள்ளன. அனைத்து பிரிவுகளும் தனித்தனியாக செயல்படுவதால், நோயாளிகள் முழு சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த இரு ஆண்டுகளில் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கையும், அவசர சிகிச்சை பிரிவுக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.
கடந்த காலங்களில் தர்மபுரி மாவட்ட கிராம பகுதி மக்கள் பல்வேறு மருத்துவ வசதிகளுக்கு சேலம், பெங்களூரு மற்றும் உள்ளூர் தனியார் மருத்துவமனைக்கு அதிக அளவில் சென்று வந்த நிலையில், தற்போது, தர்மபுரி மாவட்டத்தில் கிராம பகுதி மக்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பல்வேறு சிகிச்சைக்கு வரத்துவங்கியுள்ளனர்.
அனைத்து மருத்துவ வசதிகள் கிடைப்பதோடு, தனியார் மருத்துவமனைக்கு இணையாக சுகாதாரம் உள்ளிட்டவைகள் பராமரிக்கப்படுவதால், பொது மக்கள் அரசு மருத்துவமனையை விரும்பி சிகிச்சை பெற துவங்கியுள்ளனர்.
அதே போல் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 500 ரூபாய் குறைந்த கட்டணத்தில், சி.டி.,ஸ்கேன் பரிசோதனை செய்யும் வசதியுள்ளது.
இதனால், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் சி.டி.ஸ்கேன் செய்ய அரசு மருத்துவமனைக்கு வரத்துவங்கியுள்ளனர். அரசு மருத்துவமனை சி.டி.,ஸ்கேன் மையம் காலை 9 மணி வரையில் மாலை, 5 மணி வரையில் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு ஸ்கேன் செய்யப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் ஸ்கேன் எடுக்க நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க முன் கூட்டியே தேதி குறிப்பிட்டு, குறிப்பிட்ட நாளில் வந்து ஸ்கேன் எடுப்பதால், நோயாளிகள் அவதியின்றி ஸ்கேன் எடுத்து செல்லும் நிலையுள்ளது.
கடந்த இரு ஆண்டுகளில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகள் வருகை அதிகரித்து இருப்பதோடு, பலருக்கு உயிர் காக்கும் சிகிச்சைகள் உரிய நேரத்தில் கிடைத்திருப்பது, அரசு மருத்துவமனையை மக்கள் நாடுவதற்கான காரணமாக அமைந்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.