district news | 3 துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணி விறுவிறுப்பு: மேற்பார்வை பொறியாளர் தகவல்| Dinamalar

தமிழ்நாடு

3 துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணி விறுவிறுப்பு: மேற்பார்வை பொறியாளர் தகவல்

Added : பிப் 07, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கரூர்: குறைந்த மின்னழுத்த பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, கரூர் மாவட்டத்தில், 9.5 கோடி ரூபாய், செலவில், மூன்று துணை மின்நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
தமிழகத்தில் மின்சார உற்பத்தியில் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக, சென்னையைத் தவிர பிற மாவட்டங்களிலும், தினமும், பல மணி நேர மின்வெட்டு தற்போது அமலில் உள்ளது. வரும் ஜூன் மாதத்துக்குள் மின்வெட்டு இல்லாத சூழலை ஏற்படுத்த, பல்வேறு புதிய திட்டப்பணிகளை மின்வாரியம் துரிதப்படுத்தியுள்ளது. இருப்பினும், மின்வாரியத்திடம் பழமையான உள்கட்டமைப்பு வசதிகள் தான் உள்ளது.
இதனால், பல இடங்களில் மின் சப்ளையில் பாதிப்பு ஏற்படுவதாக, பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன் உள்ள கேபிள்கள், திறன் குறைந்த டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் தொழில்நுட்ப கருவிகள் தான், தற்போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் திறன் குறைந்த டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் துணை மின் நிலையங்களிலிருந்து, அளவுக்கதிகமான மின் இணைப்புகளுக்கு சப்ளை செய்யப்படுவதால், அழுத்தம் தாளாமல், குறைந்த மின்னழுத்தம் மற்றும் மின் சப்ளை துண்டிப்பு பிரச்னைகள் ஏற்படுகின்றன
புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பதன் மூலம், அப்பகுதிகளில் மின் தேவையை பூர்த்தி செய்ய இயலும். தற்போது, இணைப்புகளின் எண்ணிக்கை, சப்ளை தூரம் மற்றும் கொள்திறன் ஆகியவற்றிற்கேற்ப, புதிய துணை மின்நிலையங்கள் அமைக்கவும், டிரான்ஸ்பார்மர்களை மாற்றவும் மின்வாரியம் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கரூர் மாவட்டத்தில், மூன்று இடங்களில் புதிய துணை மின்நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சிவசாமி, கூறியதாவது:
காணியாளம்பட்டியில், இரண்டு கோடி ரூபாய், செலவில், 110/11, கி.வோ., திறன் கொண்ட துணை மின் பகிர்மான நிலைய பணிகள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு தயாரன நிலையில் உள்ளது. மேலும், இனுங்கூர், 33/11, கி.வோ., திறன் துணை மின் நிலையமும், ஈகல்பட்டியில், 33/11, கி.வோ., துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த இரண்டு துணை மின்நியைங்கள், ஏழு கோடியே, 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது.
இந்த ஆண்டில் மொத்தம், ஒன்பது கோடி, 50 லட்சம், ரூபாய் செலவில், மூன்று இடங்களில் துணை மின்நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை