இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில், மூன்று ஆசிரியர்களை, ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளனர். பாகிஸ்தானில், ஆப்கன் எல்லையையொட்டிய பகுதிகளில், பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கின்றனர். ஆப்கானிஸ்தானில் ஆட்சி இழந்த தலிபான்கள், இந்த பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். இங்குள்ள பெண்கள், பள்ளிக்கு செல்வதற்கு எதிர்ப்பு காணப்படுகிறது. இதற்கிடையே, பலுசிஸ்தான் மாகாணத்தின், குஸ்தார் நகரில், அரசு பள்ளி ஆசிரியர்கள் மூன்று பேரை, மர்ம ஆசாமிகள், துப்பாக்கியை காட்டி மிரட்டி, கடத்தி சென்றுள்ளனர். இவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.