world news | சாலமன் தீவில் பூகம்பம் சுனாமியால் மக்கள் பீதி| Dinamalar

சாலமன் தீவில் பூகம்பம் சுனாமியால் மக்கள் பீதி

Added : பிப் 07, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிட்னி : பசிபிக் கடலில் உள்ள, சாலமன் தீவில், பூகம்பம் தாக்கியதில், பல வீடுகள் தரைமட்டமாயின. பூகம்பத்தை தொடர்ந்து சிறிய அளவில் சுனாமி ஏற்பட்டது. தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள சாலமன் தீவில், நேற்று, 8 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. இதனால், இந்த தீவில் உள்ள பல பகுதிகள் அதிர்ந்தன. ஏராளமான வீடுகள் தரைமட்டமாயின. இந்த பூகம்பத்தின் அதிர்வு, பப்புவா நியூகினியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டது. இந்த பயங்கர பூகம்பத்தினால், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஐந்து அடி உயரம் கொண்ட கடல் அலைகள், தீவுகளை தாக்கின. இதனால், பெரிய பாதிப்பு ஏற்படாததால், சில பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இந்த பூகம்பத்தினால், சான்டாகுருஸ் தீவு தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு, ஐந்து பேர் இறந்துள்ளதாக, முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால், மக்கள் அருகே உள்ள மலைகளுக்கு சென்று தஞ்சம் அடைந்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை