world news | சீனாவில் 192 வீடுகள் வைத்திருந்த போலீஸ் அதிகாரி, "டிஸ்மிஸ்!'| Dinamalar

சீனாவில் 192 வீடுகள் வைத்திருந்த போலீஸ் அதிகாரி, "டிஸ்மிஸ்!'

Added : பிப் 07, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பீஜிங் : சீனாவில், 192 வீடுகள் வைத்திருந்த, போலீஸ் அதிகாரி, பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.சீனாவில், தனி நபர், பல வீடுகளை வைத்திருக்க தடை உள்ளது. இதை மீறி பலர், ரகசியமாக வீடுகளை கட்டி, வாங்கி வருகின்றனர். சமீபத்தில் அரசு அதிகாரி ஒருவர், தன் குடும்ப உறுப்பினர் பெயர்களில், 31 வீடுகளை வைத்திருந்ததற்காக, கைது செய்யப்பட்டார். இதே போல, வங்கி அதிகாரியான, கோங் அய்அய் என்ற பெண், ஷான்சி மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், தலைநகர் பீஜிங்கிலும், 875 கோடி ரூபாய் அளவுக்கு, 20 வீடுகள் வைத்திருந்ததற்காக, இரண்டு நாட்களுக்கு முன், கைதானார். இதற்கிடையே, சாவோ ஹாய்பின் என்ற போலீஸ் அதிகாரி, குவாங்டாங் மாகாணத்தின் பல நகரங்களில், 192 வீடுகளை, பல்வேறு பெயர்களில் வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக உள்ள சாவோ, சட்டத்தை மீறி, நூற்றுக்கும் அதிகமான வீடுகளை வைத்துள்ளதாக வந்த புகாரை அடுத்து, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mani - chennai,இந்தியா
07-பிப்-201306:26:02 IST Report Abuse
mani இந்தியாவுல இது போலே ஒருவருக்கு /ஒரு குடுமெபத்துக்கு 2 வீடுக்கு மேலே இருந்தால் மற்றவைகளை அரசுடமை செய்தால் விலையும் குறையும் வீடு வாடகையும் குறையும். சட்டம் இய்ற்ற முடியுமோ + எதையும் புடுங்கமுடியாது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை