நியூயார்க் : அமெரிக்காவில், "கிரெடிட் கார்டு' மோசடியில் ஈடுபட்ட, ஐந்து இந்தியர்கள் உள்ளிட்ட, 18 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவில், 100 கோடி ரூபாய் அளவுக்கு மிகப் பெரிய, "கிரெடிட் கார்டு' மோசடி நடந்துள்ளது. போலியான அடையாள அட்டைகளை தயாரித்து, நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை ஏமாற்றி, "கிரெடிட் கார்டு' வாங்கியவர்கள், அவற்றை உபயோகித்து, பொருட்களை வாங்கினர். பின்னர், "கிரெடிட் கார்டு' மூலம் செலவழித்த பணத்தை, திரும்ப தராமல் ஏமாற்றியுள்ளனர்.இது தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து, அமெரிக்க போலீஸ், நியூஜெர்சி, நியூயார்க் உள்ளிட்ட நகரங்களை சேர்ந்த, 18 பேரை கைது செய்தது. இவர்களில் ஐந்து பேர் இந்தியர்கள். இவர்கள் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டால், 30 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.