Advertisement
வலம்புரி சங்கு விற்பனை: சேகரிப்பில் நாடோடிகள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

ஈரோடு: ஈரோட்டில் வலம்புரி சங்கு விற்பனையில் நாடோடிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோட்டில் பவானி ரோடு, லட்சுமி நகர், பவானி, கருங்கல்பாளையம் உள்பட பல பகுதிகளில், 300க்கும் மேல் நாடோடிகள் வாழ்ந்து வருகின்றனர். தங்களுக்கு தெரிந்த கைவினை பொருட்களை தயாரித்து, அதனை விற்பனை செய்து வருமானம் சம்பாதித்து வருகின்றனர்.
நாடோடிகள் தயாரிக்கும் வேங்கை பொட்டு, திருஷ்டி கயிறு, பிரம்பு சேர், மூலிகை மருந்து, எண்ணெய் ஆகியவற்றுக்கு ஈரோட்டில் நல்ல வரவேற்பு உள்ளது.
பெரிய நிறுவனங்களும், நாடோடிகள் தயாரிக்கும் பொருட்களை மொத்தமாக வாங்கி சென்று, ஷோரூமில் அதிக விலைக்கு விற்று வருகின்றனர்.
இந்நிலையில், ராமேஸ்வர வலம்புரி சங்கு விற்பனையில் நாடோடிகள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து நாடோடி சித்ரா கூறியதாவது:
ஈரோட்டில், 300க்கும் மேற்பட்ட நாடோடிகள் வசிக்கின்றனர். கைவினை பொருட்கள், மருந்துகள் தயாரித்து விற்பனை செய்து, பிழைப்பு நடத்துகிறோம்.
நாங்கள் தயாரித்த பொருட்களை, ஷோரூமில் வைத்து பல நிறுவனங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து, வலம்புரி சங்குகளை சேகரித்து, ஈரோட்டில் விற்பனை செய்து வருகிறோம்.
ஒரு சங்கு, 20 முதல், 30 ரூபாய்க்கு விற்கிறோம். மேலும், வலம்புரி சங்கில் செய்யப்பட்ட திருஷ்டி கயிறை, 40 முதல், 50 ரூபாய் வரை விற்கிறோம்.
வலம்புரி சங்கினை வீடுகளில் வைத்தால், நன்மை உண்டாகும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுவதால், வலம்புரி சங்கு விற்பனை ஜோராக நடக்கிறது, என்றார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.