district news | குவிப்பு! கனி மார்க்கெட்டில் கோடைகால காட்டன் வகைகள்... தீபாவளிக்குப்பின் புதிய ரகங்கள் வரவால் உற்சாகம்| Dinamalar

தமிழ்நாடு

குவிப்பு! கனி மார்க்கெட்டில் கோடைகால காட்டன் வகைகள்... தீபாவளிக்குப்பின் புதிய ரகங்கள் வரவால் உற்சாகம்

Added : பிப் 07, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

ஈரோடு: கோடை வெயில் துவங்கி வரும் நிலையில் ஈரோடு "கனி' மார்க்கெட்டில் காட்டன் ஆடைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் வாரந்தோறும் "கனி' மார்க்கெட், பி.பி., அக்ரஹாரம், காந்திஜி ரோடு ஆகிய பகுதியில் ஜவுளி சந்தை நடக்கிறது. இங்கு, திருப்பூர், கோவை மற்றும் வெளிமாநிலங்களில் தயார் செய்த காட்டன் ஆடைகள் மற்றும் வெஸ்டன் உடைகள் கொண்டு வந்து ஈரோடு ஜவுளி சந்தையில் வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.
ஈரோடு சந்தையில் அனைத்து வகையான ஜவுளி துணிகளும் மலிவு விலையில் கிடைப்பதால், உள்ளூர் மற்றும் வெளியூர் மொத்தம், சில்லரை வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்கின்றனர். கோவில் திருவிழா, தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை சீஸனை தொடர்ந்து, கோடை காலம சீஸன் துவங்கி உள்ளது.
கோடைகாலம், மார்ச் மாதம் துவங்கி, வெயில் தாக்கம் செப்டம்பர் வரை நீடிக்கும். மே, ஜூன், ஜூலையில்வெப்பம் உச்ச நிலையை எட்டும். இம்மாதங்களில் மக்கள் இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்த்து வருகின்றனர்.
தவிர, உடலில் ஏற்படும் வியர்வையை உருஞ்சக்கூடிய காட்டன் ஆடைகள் வாங்குதில் முனைப்பு காட்டுகின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காட்டன் டி-ஷர்ட், ஷர்ட், ஃபிராக், நைய்டி, காட்டன் சேலை, லுங்கி, சுடிதார், நைட்சூட், குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஆடைகள் போன்றவை அதிகமாக வாங்கி செல்வர்.
தற்போது, ஃபிப்ரவரி துவங்கியதால், பகலில் கடும் வெயிலும், காலை, மாலையில், மிதமான பனியும் பொழிகிறது. இம்மாதம் இறுதியில் இருந்து கோடை வெயில் சூடுபிடிக்கும் என்பதால், மார்க்கெட்டில் காட்டன் ரக துணிகளை வியாபாரிகள் விற்பனைக்கு குவித்து வருகின்றனர்.
ஈரோடு "கனி' மார்க்கெட் வாரச்சந்தை வியாபாரிகள் கூறியதாவது:
மின் தடை, உற்பத்திக்கான மூலப்பொருட்கள் விலை உயர்வு, ஆள் கூலி உயர்வு, சலவை மற்றும் சாயப்பட்டறை பிரச்னை போன்ற காரணத்தால் கோவை, திருப்பூர், பகுதியில், 100க்கும் மேற்பட்ட பின்னலாடை தயாரிப்பு நிறுவனங்கள் மூடிவிட்டனர். சிவகிரி, பெருந்துறை, காங்கேயம், சென்னிமலை, சித்தோடு, மொடக்குறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் உற்பத்தியாகும் துணி ரகங்களை மட்டும் சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர்.
பெரும்பாலும் திருப்பூரில் இருந்து காட்டன் ஆடைகள் அதிகமாக ஈரோடு சந்தைக்கு வரும். பல்வேறு பிரச்னை காரணமாக காட்டன் உற்பத்தியும் கணிசமாக குறைந்து விட்டது. கோடை சீஸனில், காட்டன் மற்றும் பனியன் கிளாத் ரக துணி விற்பனை களைகட்டும்.
பத்து ரூபாய் முதல், ஆயிரம் ரூபாய் வரையிலான துணிகள், தரமாகவும், விதவிதமான மாடல்களிலும் தீபாவளிக்குப்பின் தற்போது குவிந்துள்ளது.
இதனால், தேவைக்கேற்ப காட்டன் ரகம், டி-ஷர்ட் துணிகள், மார்க்கெட்டுக்கு வரத்தாகிறது. கிராமப்புறங்களில் வீதி வீதியாக சென்று துணி விற்பனை செய்யும் சில்லரை வியாபாரிகள் மற்றும் மொத்த வியாபாரிகளும், அதிகளவு காட்டன் ரக துணிகள் கொள்முதல் செய்கின்றனர். அடுத்த மாதம் முதல் விற்பனை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை