மேட்டூர்: மேச்சேரி அருகே பாரக்கல்லுரை சேர்ந்தவர் சாமிநாதன், 35. இவர், அகில இந்திய மனித உரிமை பாதுகாப்பக ஒன்றிய செயலாளராக உள்ளார். இவர், மேச்சேரியை சேர்ந்த குமாரிடம், வட்டிக்கு, 1.80 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
இதில், 1.40 லட்சம் கொடுத்துள்ளார். மீதி, 40 ஆயிரத்துக்கு வட்டியும் கட்டியுள்ளார். ஆனால், அசல் பணத்தை தரவில்லை. மீதி பணத்தை கேட்டு குமார், அவரது மனைவி ஜோதி, மருமகன் இளங்கோவன் உள்பட, 12 பேர், சாமிநாதனை அடித்துள்ளனர்.
மேச்சேரி போலீஸ் ஸ்டேஷனில், சாமிநாதன் புகார் செய்தார். மேச்சேரி போலீஸார் விசாரித்து, கந்துவட்டி சட்டத்தின் கீழ், இளங்கோவனை கைது செய்தனர். மற்ற, 11 பேரை, போலீஸார் தேடி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.