நாமக்கல்: பட்ஜெட் தயாரிப்பு கூட்டத்தில் இருந்து வெளியேறிய உதவி திட்ட அலுவலரை, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன், "சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார். வெளியேறியதற்கான சரியான காரணம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஒரே நாளில் உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
இது குறித்து, அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாதம், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான பட்ஜெட் முன் தயாரிப்பு கூட்டம், சென்னையில் நடப்பது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டும், பட்ஜெட் தயாரிப்பு கூட்டம், கடந்த மாதம், 7 முதல், 26ம் தேதி வரை, சென்னையில் நடந்தது.
நாமக்கல் மாவட்டத்திலிருந்து, உதவி திட்ட அலுவலர் அல்லிமுத்து தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவினர், சென்னை சென்றனர். திட்ட இயக்குனர் முகமது அஸ்லாம் தலைமையில் நடந்த இந்த பட்ஜெட் கூட்டத்தில், முதல் இரண்டு நாட்கள் சென்ற, நாமக்கல் மாவட்ட உதவி திட்ட அலுவலர் அல்லிமுத்து, 9ம் தேதி நடந்த கூட்டத்தில் பங்கேற்று, உடல்நிலை சரியில்லாததால், இரண்டு மணி நேரத்தில் வெளியேறினார்.
திட்ட இயக்குனர் முகமது அஸ்லாம் பரிந்துரை பேரில், பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன், உதவி திட்ட அலுவலர் அல்லிமுத்துவை, "சஸ்பெண்ட்' செய்து, கடந்த, 4ம் தேதி உத்தரவிட்டார்.
ஏ.பி.ஓ., அல்லிமுத்து, நேற்று முன்தினம் நேரில் சென்று விளக்கம் அளித்தார். அதை தொடர்ந்து, அவரது, "சஸ்பெண்ட்' உத்தரவு ரத்து செய்யப்பட்டது. அதையடுத்து, மீண்டும் பணியில் சேர்ந்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.