ப.வேலூர்: மனைவியை அழைத்து வருவதாக கூறிச் சென்ற வாலிபர் மாயமானது குறித்து, அவரது தாய், போலீஸில் புகார் செய்தார்.
நாமக்கல் அருகே மாவுரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் ரிக் டிரைவர் செல்வம், 40. கருத்து வேறுபாடு காரணமாக, செல்வம், அவரது மனைவி பூங்கொடியும், இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பூங்கொடி, திருச்செங்கோடு அருகே இருப்புளி எனும் இடத்தில், தனது இரு குழந்தைகளுடன், தனியாக வசித்து வருகிறார்.
இச்சூழலில், கடந்த ஆண்டு அக்டோபர், 17ம் தேதி, மனைவி பூங்கொடி மற்றும் குழந்தைகளை அழைத்து வருவதாக கூறி, டிரைவர் செல்வம், இருப்புளி சென்றுள்ளார். பின்வர், அவர் வீடு திரும்பவில்லை.
மகன் ரிக் வேலைக்கு சென்றிருக்கலாம் என, அவரது தாய் தனபாக்கியம் நினைத்திருந்தார். இச்சூழலில், செல்வம் வேலை செய்யும் ரிக் உரிமையாளரிடம், செல்வம் குறித்து, தனபாக்கியம் விசாரித்துள்ளார். அப்போது, மூன்று மாதமாக செல்வம் வேலைக்கு வரவில்லை எனக் கூறியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த தனபாக்கியம், நடந்த சம்பவம் தொடர்பாக வேலகவுண்டம்பட்டி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து, மாயமான செல்வத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.