district news | ஃபிப்.,16ல் ஊர்க்காவல்படை நேர்காணல்: எஸ்.பி., தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஃபிப்.,16ல் ஊர்க்காவல்படை நேர்காணல்: எஸ்.பி., தகவல்

Added : பிப் 07, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: "நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், வரும், 16ம் தேதி, ஊர்க்காவல் படைக்கான நேர்முகத் தேர்வு நடக்க உள்ளது' என, மாவட்ட போலீஸ் எஸ்.பி., கண்ணம்மாள் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, விண்ணப்பங்கள், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெறப்பட்டது. அதற்கான நேர்முகத் தேர்வு, வரும், 16ம் தேதி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், காலை, 7 மணிக்கு நடக்க உள்ளது.
நேர்காணலுக்கு வருவோர், அனைத்து கல்விச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் நகல் மற்றும் அழைப்பு கடிதத்துடன் வரவேண்டும். அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள், விண்ணப்பம் செய்ததற்கான சான்றுடன் நேர்காணலில் பங்கேற்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை