நாமக்கல்: புலவர்பாளையம் பஸ் ஸ்டாப்பில், அரசு டவுன் பஸ் நிற்காததால், பள்ளி மாணவ, மாணவியர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
நாமக்கல் அடுத்த ராசாம்பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புலவர்பாளையம் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த, 100க்கும் அதிகமான மாணவ, மாணவியர், தொட்டிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
அவர்கள் அனைவரும், தினமும் புலவர்பாளையத்தில் இருந்து, வள்ளிபுரம் சென்று, அங்கிருந்து தொட்டிப்பட்டி பள்ளிக்குச் சென்று வருகின்றனர். அவர்கள், அவ்வழியாயக இயக்கப்படும், 9ம் எண் கொண்ட எல்.எஸ்.எஸ்., அரசு டவுன் பஸ்சில சென்று வந்தனர்.
இந்நிலையில், ஒரு வாரமாக, அந்த அரசு டவுன் பஸ், புலவர்பாளையத்தில் நிற்பதில்லை. அதனால், பள்ளி மாணவ, மாணவியர் கடும் அவதிப்படுகின்றனர். அந்த பஸ்சை விட்டால், அதையடுத்து, அரை மணி நேரம் கழித்து வரும் பஸ்சில் செல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இது குறித்து, சம்பந்தப்பட்ட பஸ் டிரைவர், கண்டக்டரிடம் கேட்டால், "பஸ் நிறுத்த முடியாது; உங்களால் முடிந்தை செய்து கொள்ளுங்கள்' என அடாவடியாக பேசுகின்றனர். இது, பொதுமக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
எனவே, "மாணவ, மாணவியரின் நலனை கருத்தில் கொண்டு, 9ம் எண் எல்.எஸ்.எஸ்., பஸ், குறிப்பிட்ட ஸ்டாப்பில் நின்று மாணவ, மாணவியரை ஏற்றிச் செல்லும் வகையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அறிவுரை வழங்க வேண்டும்' என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.