ஆத்தூர்: கலப்பு திருமணம் குறித்த பிரச்னையில், மாதர் சங்க நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட, ஆத்தூர் மகளிர் இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகிய இருவரும், "மன்னிப்பு' கேட்டனர்.
கள்ளக்குறிச்சி அருகே, சங்கராபுரம் தாலுகா, சூளாக்குறிச்சி கிராமம், வாய்க்கால்கரை பகுதியை சேர்ந்த சுந்தரம் மகன் அனுஷ், 24. சேலம், ஆத்தூர் அருகே, கோவிந்தம்பாளையம் கிராமத்தை சேர்ந்த, தே.மு.தி.க., நிர்வாகி சின்னசாமி முதலியார் மகள் கவிதாலயா, 24, ஆகிய இருவரும், காதல் கலப்பு திருமணம் செய்து கொண்டனர்.
கவிதாலயாவை, அவரது பெற்றோர், சகோதரர் உள்பட நான்கு பேர், பத்து நாளில் அனுப்புவதாக கூறி அழைத்துச் சென்றனர். மூன்று மாதங்களுக்கு மேலாகியும், கவிதாலயாவை அனுப்பிவைக்கவில்லை. அனுஷின் தந்தை சுந்தரம், தாய் மும்பை மாதர் சங்க நிர்வாகி சந்திரா, மாதர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளுடன், கடந்த, 1ம் தேதி, ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், இதுகுறித்து புகார் செய்தனர்.
அப்போது, மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மீனா, "வேறு ஜாதி பெண்ணை எதற்கு திருமணம் செய்ய வேண்டும்' என, அலட்சியமாக பேசியதுடன், மாதர் சங்க நிர்வாகிகளிடம் வாக்குவாதம் செய்ததாக, புகார் எழுந்தது.
மகளிர் இன்ஸ்பெக்டர் மீனா, ஏட்டு சித்ரா ஆகியோரை கண்டித்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், மாநில செயலாளர் ஜோதிலட்சுமி தலைமையில், மகளிர் ஸ்டேஷன் முன், நேற்று, போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று காலை, 11.30 மணியளவில், ஆத்தூர் டி.எஸ்.பி., அலுவலகத்தில், ஆத்தூர் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில், மாதர் சங்க, மாநில செயலாளர் ஜோதிலட்சுமி, மாவட்ட தலைவர் ஞானசவுந்தரி, மாவட்ட செயலாளர் ராஜாத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளுடன், பேச்சுவார்த்தை நடந்தது.
அதில், "இன்ஸ்பெக்டர் மீனா, ஏட்டு சித்ரா ஆகிய இருவரும், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' என, மாதர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
பகல், 12.40 மணியளவில், இன்ஸ்பெக்டர் மீனா, ஏட்டு சித்ரா ஆகிய இருவரும், "மாதர் சங்க நிர்வாகிகளின் மனம் வருந்தும் அளவுக்கு, நாங்கள் நடந்திருந்தால், வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். இனி வரும் காலத்தில், இதுபோன்ற சம்பவம் நடக்காது, மாதர் சங்கத்தினர் நண்பர்களாக பழகலாம், தனக்கு மனவருத்தம் கிடையாது' என, தெரிவித்தனர். அதையடுத்து, கண்டன போராட்டம், "வாபஸ்' பெறப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.