திருநெல்வேலி:சங்கரன்கோவிலை அடுத்துள்ள வரகனூர் விவசாயி ஜெகநாதன், பயிரிட்ட மக்காச்சோளப்பயிர்மழையின்மையால் கருகியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.அதே பகுதியில் விவசாயி செந்தூர்பாண்டியன் என்பவரும் தற்கொலை செய்துகொண்டார்.எனவே தமிழகத்தில் இதுவரையிலும் தற்கொலை செய்துள்ள 20க்கும் மேற்பட்ட விவசாயிகளின்குடும்பத்திற்கு தலா பத்துலட்சம் ரூபாய் வீதம் நஷ்டஈடு வழங்கவும், விவசாயத்திற்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய்வீதம் நஷ்டஈடு வழங்கவும் கோரிக்கை விடுத்தனர். இதற்காக ஊர்வலமாக சென்று சங்கரன்கோவில் தாலுகா அலுவலகம் முன்பாக மா.கம்யூ.,மாவட்ட செயலர் பாஸ்கரன் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.