பழநி:பழநி கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, மலைகோயில் கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் 2வது நாளான நேற்று ரொக்கம் ஒரு கோடியே 21 லட்சத்து 41 ஆயிரத்து 890 ரூபாய். தங்கம் 171 கிராம். வெள்ளி 5 ஆயிரத்து 345 கிராம். அமெரிக்கா, சிங்கப்பூர். மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளின் கரன்சிகள் 1084 இருந்தன. தங்கத்தால் ஆன வேல், திருமாங்கல்யம், செயின், மோதிரம் போன்றவைகளும் இருந்தன.இதில், திருஆவினன்குடி கோயில், இடும்பன்கோயில், ஒட்டன் சத்திரம் குழந்தைவேலப்பர் கோயில் கோயில் உண்டியல்களின் வசூலும் அடங்கும்.கடந்த 2 நாட்களாக நடந்த உண்டியல் எண்ணிக்கையில், மொத்த வசூல் 3 கோடியே 2 லட்சத்து 31 ஆயிரத்து 540 ரூபாயை எட்டியுள்ளது. இன்று 3வது நாளாகவும் உண்டியல் எண்ணிக்கை நடைபெறுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.