தேனி: தேனியில் விஷ மீன்கள் விற்பனை செய்யப்படுவதால், மீன் பிரியர்கள் உஷாராக இருக்க வேண்டும். தேனியில் கொட்டகுடி ஆற்றிலும், முல்லை பெரியாற்றிலும் நீர் வரத்து மிகவும் குறைந்து விட்டது. அதேபோல், தேனியை சுற்றி உள்ள கண்மாய்களிலும் நீர் வற்றி விட்டது. மிகவும் ஆழம் நிறைந்த பகுதிகளில் மட்டும் நீர் தேங்கி நிற்கிறது. இதனால் மீன் பிடிப்பவர்கள் ஆற்றில் தேங்கிக்கிடக்கும் நீரில் விஷ
மருந்து கலக்கின்றனர். கோட்டூர், உப்புக்கோட்டை, உப்பார்பட்டி, வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி, தேனி உட்பட பல பகுதிகளிலும், இதே போல் நீரில் விஷம் கலக்கின்றனர்.இந்த நீரினை குடிக்கும் மீன்கள் மயக்கமடைந்து மிதக்கின்றன. பெரும் பகுதி மீன்கள் இறந்து மிதக்கின்றன. இப்படி மிதக்கும் மீன்களை வலை விரித்து, அரித்து கொண்டு வந்து தேனி மார்க்கெட்டில் விற்பனை செய்கின்றனர். பிடித்த சில மணி நேரத்தில் விற்பனை செய்வதால், இந்த மீன்களை அறுக்கும் போது ச ரத்தம் கொட்டிய நிலையில், பிரெஷ்சாக இருக்கிறது. நகராட்சி சுகாதார அதிகாரிகளும், உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் இந்த மீன்களை ஆய்வு செய்ய வாய்ப்பு இல்லை.இதனை நல்ல மீன்கள் என நம்பி, மீன்பிரியர்கள் வாங்கி சாப்பிடுகின்றனர். இந்த மீன்களை சாப்பிடுபவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உட்பட பல்வேறு உபாதைகள்
ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே, மீன்களை வாங்குபவர்கள் அறிமுகம் இல்லாதவர்களிடம் வாங்கி சாப்பிட வேண்டாம். நன்கு அறிமுகம் ஆன, நம்பிக்கையானவர்களிடம் மட்டுமே மீன்களை வாங்க வேண்டும். மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் காஞ்சனா கூறியதாவது: மருந்து கலப்பவர்கள் எது போன்ற மருந்து கலந்து பிடிக்கின்றனர், என்பது தெரியவில்லை. எந்த மருந்து கலந்தாலும் சாப்பிடுபவர்களை நிச்சயம் பாதிக்கவே செய்யும். நகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சுகாதார அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய சுகாதார ஆய்வாளர்களை ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருந்து கலந்து மீன் பிடிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது,என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.