மதுரை: திருச்சி "பெல்' நிறுவன உதவி பொறியாளர் மாரிமுத்து, 56, கடத்தப்பட்டார். அவரை மதுரை, தேனியில் போலீசார் தீவிரமாக தேடுகின்றனர்.திருச்சி திருவெறும்பூர் அம்பேத்கர்காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து. சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறி சென்ற மாரிமுத்து வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மனைவி இந்திரா, கணவரை மர்ம நபர்கள் கடத்தியதாக புகார் கூறினார். திருச்சி பெல் போலீசார் கடத்தல் பிரிவில் வழக்குப் பதிவு செய்தனர்.மாரிமுத்துவை தேனி கம்பத்தில் இருந்து பஸ்சில் மதுரைக்கு அழைத்து வருவதாக தகவல் கிடைத்தது. மாரிமுத்து போட்டோவுடன் போலீசார் தேனியில் இருந்து மதுரை வரும் பஸ்களில் தீவிரமாக தேடினர். கடத்தல் பின்னணியில் மோசடி கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.