Advertisement
மாயமான குமரி மீனவர்கள் இன்று இந்தியா வருகை போன் வழி தகவல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2013,05:40 IST

நித்திரவிளை:இரயுமன்துறை மற்றும் பூத்துறையில் இருந்து கடலில் மீன்படிக்கச் சென்று, மாயமாகி, இலங்கையில் கரையேறிய மீனவர்கள் இன்று(7ம் தேதி) இந்தியா வந்து உறவினர்களைச் சந்திக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இரையுமன்துறை, பூத்துறை பகுதிகளில் இருந்து கடலில் மீன்படிக்க சென்று மாயமான நான்கு மீனவர்களில், மூன்று பேரை இலங்கை மீனவர்கள் மீட்டனர். இலங்கையில் நீர்கொழும்பு என்ற இடத்தில் கரைசேர்ந்த மீனவர்கள், காயம் காரணமாக நெகம்பு மெடிக்கல் காலேஜில் சிகிச்சை பெற்று வந்தனர்.
மீனவர்களைச் சொந்த ஊருக்கு அழைத்து வர இந்திய, இலங்கை தூதரகங்கள் சார்பல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது மீனவர்கள் இந்தியா வர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக போன் மூலம் தகவல் வந்துள்ளது. இன்று(7ம் தேதி) பற்பகல் 2 மணி அளவில் மதுரை விமான நிலையத்திற்கு மீனவர்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக, மூன்று மீனவர்கள் குடும்பத்தில் இருந்தும் தலா ஒருவர் நேற்று மதுரை புறப்பட்டு சென்றுள்ளனர். மீனவர்கள் மூவரும் தங்கள் குடும்பத்தினருடன் போனில் இதுகுறித்து பேசியுள்ளனர். மேலும், மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஐசக் ஜெயக்குமார் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.