தூத்துக்குடி:தூத்துக்குடி அருகே காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் விரக்தியில் காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரணி தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் தனியார் பாங்க் ஒன்றில் டிரைவராக வேலை பார்த்துவருகிறார். இவரது மகள் சுதா(19). தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் பிகாம் 2ம் ஆண்டு படித்துவருகிறார். முருகேசனின் உறவினர் முத்துச்சாமிஎன்பவர் கோவையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மகன் கவுதம்(19). இவர் தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகேயுள்ள ஸ்ரீனி நகரில் உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்து மில் ஒன்றில் வேலை பார்த்துவந்தார். கவுதமும், சுதாவும் உறவினர் என்பதால் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அடிக்கடி சந்திப்பு நடந்ததால் இருவருக்கும் காதல் மலர்ந்தது. அடிக்கடி சந்தித்து தங்களுடைய காதலை வளர்த்து வந்த நிலையில் இவர்களுடைய காதல் விவகாரம் சுதாவின் தந்தை முருகேசனுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து முருகேசன் சுதாவை அழைத்து கண்டித்துள்ளார். மேலும் கவுதமுடன் பழகுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்றும் கண்டித்துள்ளனர். இதையடுத்து தங்களுடைய காதலுக்கு சுதாவின் வீட்டில் எதிர்ப்பு இருந்ததை தெரிந்துகொண்ட கவுதம் உடனடியாக தன்னுடைய தந்தையிடம் தெரிவித்துள்ளார். அவரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பின்னர் மகனின் பிடிவாதம் கண்டு பின்னர் பேசிக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். இதனால் விரக்தியடைந்த கவுதம் தான் தங்கியிருந்த சித்தப்பாவின் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். அன்று இரவு முழுவதும் வீட்டிற்கு வரவில்லை.இதனால் அவரது சித்தப்பா மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர்.
அப்போது மடத்தூர் அருகே கவுதம் மயங்கிகிடப்பதாக சிப்காட் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற போலீசார் அங்கு மயங்கிகிடந்த கவுதமை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் விஷம் குடித்திருந்தது தெரியவந்தது. இந்நிலையில் காதலன் கவுதம் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட தகவல் சுதாவுக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சுதா காதலன் இல்லா உலகில் நான் மட்டும் இருந்து என்ன செய்யப்போகிறேன் என்று முடிவெடுத்து யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி அய்யனடைப்பு சண்முகபுரம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், தீயணைப்பு நிலைய அலுவலர்கள் ஆகியோர் விரைந்துசென்று கிணற்றில் இருந்து சுதாவின் உடலை மீட்டு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டுக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்துபுகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். ஒரே நாளில் காதல் ஜோடிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தூத்துக்குடி,கோரம்பள்ளம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.