புதுடில்லி
: "மும்பை, டில்லி நகரங்களுக்கு வழங்கப்படும் விலையில், குஜராத்
மாநிலத்திற்கு சமையல் காஸ் வழங்கப்படுவதில்லை' என, பிரதமர் மன்மோகன்
சிங்கிடம், குஜராத் முதல்வர், நரேந்திர மோடி நேற்று புகார் தெரிவித்தார்.
நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலில், மீண்டும் வெற்றி பெற்று,
முதல்வராகியுள்ள, நரேந்திர மோடி, டில்லியில் நேற்று, பிரதமர், மன்மோகன்
சிங்கை, சந்தித்தார். பின், நிருபர்களிடம் மோடி கூறியதாவது: சந்திப்பு
மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. பல விஷயங்கள் குறித்து பேசினோம். மும்பை,
டில்லி போன்ற இடங்களுக்கு, சமையல் காஸ் வழங்கப்படும் விலையில், குஜராத்
மாநிலத்திற்கு வழங்கப்படுவதில்லை. இதில் பாரபட்சமான நிலை இருந்து வருகிறது.
அந்த நகரங்களுக்கு வழங்கப்படும் விலையில், குஜராத் மாநிலத்திற்கும் வழங்க
வேண்டும் என்பது குறித்து பிரதமரிடம் கோரியுள்ளேன். இந்த பிரச்னை
குறித்து, மத்திய அரசுடன், சட்ட ரீதியாக போராடி, வெற்றி பெற்றுள்ளோம்.
தீர்ப்பு வெளியாகி, ஆறு மாதங்கள் ஆகியும், பழைய விலைக்கே காஸ்
வழங்கப்படுகிறது. கோர்ட் தீர்ப்பு நடை முறைப்படுத்தவில்லை. இது, கோர்ட்டை
அவமதிக்கும் செயல் என்று கூறி, மீண்டும் கோர்ட்டுக்குச் சென்றுள்ளோம். இதை
எதிர்த்து, மத்திய அரசும், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்து,
இப்பிரச்னையை காலம் தாழ்த்தி வருகிறது. இது குறித்தும், என் அதிருப்தியை
பிரதமரிடம் வெளிப்படுத்தினேன்.
இவ்வாறு, மோடி தெரிவித்தார்.பின்னர்
அவர், டில்லி, ஸ்ரீராம் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏராளமான மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
அவர்களை போலீசார், தடியடி நடத்தி கலைத்தனர். ற பெண்களை போலீசார் கைது
செய்து, போலீஸ் வாகனங்களில் ஏற்றினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போலீஸ்
வாகனங்கள் முன் அமர்ந்து, பெண்கள் மறியலில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி
எம்.எல்.ஏ.க்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கைதானவர்கள், பின்
விடுதலை செய்யப்பட்டனர். காயமடைந்தவர்களை, எதிர்க்கட்சி தலைவர்,
அச்சுதானந்தன், மருத்துவமனையில் பார்த்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.