புதுடில்லி : டில்லியில், கடந்த, 70 ஆண்டுகளில் இல்லாத வகையில், நேற்று முன் தினம் பலத்த மழை பெய்தது. இந்த திடீர் மழையால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. டில்லிவாசிகளுக்கு நேற்று முன்தினம் காலை, மழையுடன் விடிந்தது. சமீப நாட்களாக, அதிக பனி மூட்டத்தை பார்த்து வந்த டில்லி மக்களுக்கு, இம்மழை இன்ப அதிர்ச்சியாக இருந்தது. பலத்த மழை அல்லது மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, வானிலையாளர்கள் தெரிவித்த கருத்து மெய்யானது மட்டுமல்லாமல், பனிக்காலமான பிப்ரவரி மாதத்தில், டில்லியின், 70 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவிற்கு மழை பெய்துள்ளது. டில்லியில், நேற்று முன்தினம் அதிகாலையில் பெய்த மழையால், நகரங்களில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்தது. காலை, 8:30 மணி நிலவரப்படி, டில்லி சப்தர்ஜங் ஸ்டேஷனில் அதிகபட்சமாக, 46 மி.மீ., மழை பெய்து இருந்தது. இந்த மழை காரணமாக, தாழ்வான பகுதிகளில், மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது; இதனால், வாகனங்கள் செல்வது பாதிக்கப்பட்டது; பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதற்கு முன், ஒரே நாளில் அதிக மழை பெய்தது, 1942ம் ஆண்டு, பிப்., 21ல் தான். அப்போது, 104.1 மி.மீ., மழை பெய்து இருந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.