லக்னோ : "பேஸ்புக்' சமூக வலைதளத்தில், பிரதமர், மன்மோகன் சிங், மத்திய அமைச்சர், கபில் சிபல், சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் குறித்து, கேலி சித்திரம் வரைந்த, உத்தர பிரதேச இன்ஜினியர் கைது செய்யப்பட்டார். "பேச்சு, கருத்து சுதந்திரம், ஜனநாயகத்தின் அடையாளங்கள்' என, கூறப்பட்டு வந்த நிலையில், இணையதளங்களில் கருத்து தெரிவித்ததற்காக, சமீபகாலமாக, ஏராளமானோர் கைது செய்யப்படுகின்றனர்.இதற்கு வகை செய்யும், "தகவல் தொழில்நுட்ப சட்டம், 66 - ஏ' மாற்றியமைக்கப்பட வேண்டும்' என்ற குரல் பரவலாக எழுந்துள்ளது.இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த, சஞ்சய் சவுத்ரி என்ற சிவில் இன்ஜினியர், நேற்று, அம்மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டார். "பேஸ்புக்' இணையதளத்தின் அவரது பக்கத்தில், பிரதமர், மன்மோகன் சிங், மத்திய அமைச்சர், கபில் சிபல் ஆகியோர் குறித்து, கேலிச்சித்திரம் வரைந்துள்ளார். அதை கண்காணித்த அதிகாரிகள், சமாஜ்வாதி தலைவர், முலாயம் குறித்து சமீபத்தில் சவுத்ரி வரைந்த கேலிச்சித்திரத்தை பார்த்ததும், அவர் மீது, இந்திய குற்ற நடைமுறை சட்டம், 153 - ஏ பிரிவு மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம், 66 ஏ பிரிவின் கீழ் வழக்கு தொடர்ந்தனர்.குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிரான, கோபாவேச கருத்துகளை வெளியிட்டார் என தெரிவித்து, நேற்று அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அவரின் மொபைல் போன், "சிம் கார்டு' மற்றும் கம்ப்யூட்டர் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன. "சமூக இணையதளங்கள், சுதந்திரமான கருத்துகளை எழுதவும், அவற்றை பலர் படிக்கவும் தான்' என்ற எண்ணம், இளம் தலைமுறையினர் மத்தியில் உள்ளது. அது தவறு என்பது போல, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்படுகின்றனர்.குறிப்பாக, சிவசேனா தலைவர், பால் தாக்கரே குறித்து எழுதிய, தானே இளம் பெண்கள் இருவர், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்திற்கு எதிராக, இணையத்தில் கருத்து தெரிவித்த, ஆந்திராவின் அடிலாபாத் நகரை சேர்ந்த இரு இளைஞர்கள் என, பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். எனவே, "சமூக இணையதளத்தை பயன்படுத்தும் இளைஞர்கள், அதை சரியான படி பயன்படுத்த அறிவுறுத்தப்பட வேண்டும்' என்ற கருத்து எழுந்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.