pothu news | 61 வயது நடிகை ஜீனத் அமன் 36 வயது தொழிலதிபரை மணக்கிறார்?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

61 வயது நடிகை ஜீனத் அமன் 36 வயது தொழிலதிபரை மணக்கிறார்?

Added : பிப் 07, 2013 | கருத்துகள் (5)
Advertisement

மும்பை : பாலிவுட்டின் பழம்பெரும் கவர்ச்சி நடிகை, ஜீனத் அமன், 61, தன்னை விட, 25 வயது குறைந்த, மகன் வயதில் உள்ள தொழிலதிபரை, திருமணம் செய்ய உள்ளார். இந்த பொருந்தா திருமணம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியவர்களிடம், ""காதலுக்கு வயது கிடையாது. காதலித்து பாருங்கள்; உங்களுக்கும் அந்த உண்மை தெரியும்,'' என்கிறார்.பாலிவுட் படவுலகை, கிறங்கடிக்கும் தன் அழகால் கட்டி போட்டவர், ஜீனத் அமன். 1970ம் ஆண்டுகள் துவங்கி, 90ம் ஆண்டுகள் வரை, பாலிவுட் படங்களில், மிகக் குறைந்த ஆடைகளுடன், அவர் ஆடிய கவர்ச்சி நடனங்களுக்கும், அவர் கண் அசைவிற்கும், உடல் நளினத்திற்கும் அடிமையான ரசிகர்கள் ஏராளம்.கோடிக்கணக்கில் பணம் சேர்ந்தாலும், நல்ல வாழ்க்கை அவருக்கு அமையவில்லை. அவரை மணக்கவும், துணையாக சேர்த்துக் கொள்ளவும், தேவ் ஆனந்த், ராஜ் கபூர் போன்ற நடிகர்களும், மிகப் பெரிய தொழிலதிபர்களும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் போன்றவர்களும் முன்வந்தனர் என, இப்போதும் சொல்லப்படுகிறது. எனினும், மசார் கான் என்ற, சில படங்களில் மட்டும் தலைகாட்டியவரை, 1985ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமண வாழ்க்கை நிம்மதியாக இல்லை. திடீரென ஒரு நாள், பத்திரிகையாளர்களை அழைத்து, மசார் கானுடனான தன் திருமண வாழ்க்கை முறிந்து விட்டதாக அறிவித்து, முறைப்படி விவாகரத்தும் பெற்று விட்டார்.ஓட்டலில், பாலிவுட் நடிகர் சஞ்சய் கானுடன் ஏற்பட்ட தகராறில், சஞ்சய் கான் தாக்கியதில், ஒரு கண் பார்வையை இழந்த ஜீனத் அமன், தன் இரு மகன்கள், அசான், 26, மற்றும் ஜகான், 23, ஆகியோருடன், மும்பையில் வாழ்ந்து வருகிறார். கடந்த, 2011ம் ஆண்டு, புனே நகரில் நடந்த திரைப்பட விழாவில் பங்கேற்ற ஜீனத், தற்செயலாக, 36 வயது தொழிலதிபரை சந்தித்தார். பார்த்த உடனேயே, இரு மனங்களும் இணைந்தன. அந்த சந்திப்பு தான், இப்போது திருமணம் வரை சென்றுள்ளது. தாயின் புரட்சிகர திருமணத்திற்கு, மகன்கள் இருவரும், பூரண ஆசி வழங்கியுள்ளனர். தங்கள் வயதை விட, 10 வயது தான், தங்கள் தந்தைக்கு அதிகம் என்ற போதிலும், தாய் ஜீனத் சந்தோஷமாக இருந்தால் போதும் என்கின்றனர், இரு மகன்களும். "இந்த வயதில் காதலா...' என, ஜீனத் அமனிடம் நிருபர் ஒருவர் கேட்க, ""காதலுக்கு வயது கிடையாது. மனம் தொடர்பானது அது. உடலுக்கும், அதற்கும் சம்பந்தமில்லை. எந்த வயதிலும் காதல் வரும். நீங்களும் காதலித்து பாருங்கள்; உண்மை தெரிய வரும்,'' என்றார். எனினும், தன் இளம் காதலர் பற்றியோ, திருமணம் எப்போது என்பது குறித்தோ, அவர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.இதற்கிடையே, ஜீனத் அமனை சந்தித்த சில செய்தியாளர்களிடம் பேசிய அவர், ""நான் காதலிப்பது உண்மை தான். திருமணம் செய்யும் எண்ணமில்லை. குறைந்தபட்சம் இப்போதைக்கு திருமணம் செய்ய மாட்டேன். எந்த முடிவும் நான் இன்னும் எடுக்கவில்லை,'' என்று கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani Ramalingam - Chennai,இந்தியா
07-பிப்-201319:20:04 IST Report Abuse
Mani Ramalingam அருமை அருமை கொடுத்து வைத்த தொழிலதிபர், வாழ்க வாழ்க புது காதல் ஜோடிகள் ????
Rate this:
Share this comment
Cancel
Narayanan - Madurai,இந்தியா
07-பிப்-201312:23:04 IST Report Abuse
Narayanan Really wonder, where the country goes?
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
07-பிப்-201311:15:18 IST Report Abuse
Pannadai Pandian ஜீனத்தின் முதல் கணவர் மசார் கான் எப்போதும் ஜீனத்தை அடித்து துன்புறுத்துவார். அதுவும் குழந்தைகளுக்கு முன்பே. இதெல்லாம் முஸ்லிம் அடக்கு முறை, அம்மதத்தில் பெண்களுக்கு அடிமைகளுக்கு உள்ள உரிமை தான் உண்டு. தற்போது காதலிக்கும் தொழிலதிபர் யார் என்று தெரியவில்லை. முஸ்லிமாக இருக்கும் பச்சத்தில் அவரது சோகம் தொடரும். 60 வயதில் காதல் வருவதில் தவறில்லை, பிள்ளை கூட பெற்றுக்கொள்ளலாம்.
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
07-பிப்-201309:47:27 IST Report Abuse
Swaminathan Nath காதலுக்கு வயதில்லை, // உங்களை போன்றவார்களுக்கு நாகரீகம் இல்லை, //// பாரத பண்பாடு ??????????????
Rate this:
Share this comment
Cancel
ஹரிபாஸ்கர் - திருச்சி,இந்தியா
07-பிப்-201308:30:07 IST Report Abuse
ஹரிபாஸ்கர் இந்த மாதிரி கேடு கெட்ட காதல் எங்களுக்கு வேண்டாம்பா,,,,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை