"தமிழகத்திற்கு
காவிரி நீர் திறப்பு, நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியீடு ஆகிய
விவகாரங்களில், சுப்ரீம் கோர்ட்டில் இன்று அறிவிக்கும் முடிவுக்கு இணங்க,
அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என, கர்நாடகா சட்டசபை, மேலவை கட்சி
தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.காவிரி நடுவர் மன்ற இறுதி
தீர்ப்பை, இம்மாதம், 20ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்ற சுப்ரீம்
கோர்ட் தீர்ப்பு குறித்து, கர்நாடகா சட்டசபை, மேலவை தலைவர்களுடன்,
கர்நாடகா அரசு நேற்று ஆலோசனை நடத்தியது. பெங்களூரு, விதான் சவுதாவில் நடந்த
இந்த கூட்டத்தில், முதல்வர், ஜெகதீஷ் ஷெட்டர், அமைச்சர் பசவராஜ் பொம்மை,
சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், சித்தராமையா, மேலவை எதிர்க்கட்சி தலைவர்,
எஸ்.ஆர்.பாட்டீல், ம.ஜ.த., தலைவர் நானய்யா உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின், நீர்வளத்துறை அமைச்சர், பசவராஜ் பொம்மை கூறியதாவது:
தமிழகத்துக்கு, 2 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விடுமாறு, சுப்ரீம் கோர்ட்
உத்தரவிட்டுள்ளது. இதற்கான காலக்கெடு எதுவும் விதிக்கவில்லை. காவிரி
நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடுமாறு மத்திய அரசுக்கு
உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணை, நாளை (இன்று) உச்ச
நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. சுப்ரீம் கோர்ட் அறிவிக்கும்
உத்தரவை பொறுத்து, கர்நாடகா அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும். இது தொடர்பாக
இன்று டில்லி செல்கிறோம். வக்கீல்கள் குழுவுடன் கலந்து ஆலோசித்து,
கர்நாடகாவுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மறு சீராய்வு மனு
தாக்கல் செய்ய முடியுமா என்பது பற்றி வக்கீல் நரிமனுடன் ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, காவிரி நடுவர் நீதிமன்ற இறுதி
தீர்ப்பை, அரசிதழில் வெளியிடுமாறு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதை,
மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங்கை வலியுறுத்த,
அனைத்து கட்சியினருடன் டில்லி செல்ல, மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.