Advertisement
சோனியாவுக்கு அத்வானி புத்தகம் அனுப்பி வைத்தார் ம.பி., அமைச்சர்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2013,05:56 IST

புதுடில்லி : காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, ஷகீல் அகமதுவின் பேச்சை கண்டிக்கும் வகையில், ம.பி., மாநில அமைச்சர் ஒருவர், அத்வானியின் புத்தகத்தை, காங்கிரஸ் தலைவர், சோனியாவுக்கு அனுப்பியுள்ளார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான, ஷகீல் அகமது, சமீபத்தில், ராஜஸ்தானில் நடந்த பொது கூட்டத்தில் பேசும்போது, "பாகிஸ்தானில் பிறந்த அத்வானி, ஏன் இந்தியாவில் உள்ள இந்துக்களின் நலன் பற்றி யோசிக்க வேண்டும்? பாகிஸ்தானில், 3 சதவீத இந்துக்கள் வசிக்கின்றனர். அவர்கள், அதிக துயரை அனுபவிக்கின்றனர். அவர்களுக்கு, சேவை செய்வதை விடுத்து, அத்வானி ஏன் இங்கு வர வேண்டும்?' என, கேள்வி எழுப்பினார். ஷகீலின் பேச்சுக்கு, பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பா.ஜ., செய்தி தொடர்பாளர், ரவிசங்கர் பிரசாத், ""ஷகீல் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, பிரதமர் மன்மோகன் சிங், கட்சி தலைவர், சோனியாவிடம், இதே கேள்வியை கேட்க விரும்புகிறோம்,'' என்றார். இந்நிலையில், ம.பி., மாநில, பா.ஜ.வை சேர்ந்த, வர்த்தக அமைச்சர், கைலாஷ் விஜயாவார்கியா, அத்வானியின் சுயசரிதையான, "என் நாடு; என் வாழ்க்கை' புத்தகத்தை, காங்கிரஸ் தலைவர், சோனியாவுக்கு அனுப்பியுள்ளார். "அத்வானியின் வாழ்க்கையை காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்' என்ற நோக்கில் அனுப்பியுள்ளதாக, கைலாஷ் தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில், ""ஷகீல் அகமது, அத்வானியை விமர்சித்ததன் மூலம், பிரதமர் மன்மோகன் சிங்கையும், கட்சி தலைவர் சோனியாவையும் அவமானப்படுத்திஉள்ளார்,'' என்றார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Nagarajan.Su - Chennai,இந்தியா
07-பிப்-201308:16:10 IST Report Abuse
Nagarajan.Su பாகிஸ்தானில் பஞ்சாப் மாநிலத்தில் கஹ் என்ற ஊரில் பிறந்த பிரதமர் மன்மோகன் சிங் மட்டும் பிரதமராகவும், வேற்று நாடான இத்தாலியில் பிறந்தவர் காங்கிரஸ் கட்சியின் தலைவரராகவும் இருக்கும் போது, அத்வானி இந்தியாவில் மக்கள் தொண்டாற்றுவதற்கு யாரிடம் அனுமதி கேட்க வேண்டும்? காங்கிரஸ் கட்சிக்கு ஒரு நியாயம். பிஜேபிக்கு ஒரு நியாயமா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.