பிகானீர் : மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், ஐந்து மாத பெண் குழந்தையின் மூக்கு, உதடு, கன்னத்தை கணவன் கடித்து குதறியதால், படுகாயமடைந்து, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்ற குழந்தை, நேற்று இறந்தது. ராஜஸ்தானின், பிகானீர் அருகே சியானா கிராமத்தை சேர்ந்தவர், பகதூர் சிங், 36. இவர் மனைவி சந்தோஷி. இவர்களுக்கு, ஐந்து மாதத்தில் பெண் குழந்தை இருந்தது. இரண்டு வாரங்களுக்கு முன், மது அருந்தி வீட்டுக்கு திரும்பிய பகதூர் சிங், மனைவியுடன் சண்டையிட்டார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில், அருகில் அழுது கொண்டிருந்த, குழந்தையை தூக்கிய பகதூர், வெறித்தனமாக, அதன் மூக்கு, உதடு, கன்னம் ஆகியவற்றை கடித்து, சதை துண்டங்களை எடுத்து விட்டார். பலத்த காயமடைந்து, வலியால் துடித்த குழந்தை, ஜெய்ப்பூரின், சவால் மான்சிங் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, அந்த குழந்தைக்கு நேற்று இறந்தது. இதையடுத்து, குழந்தையை கடித்து குதறிய, தந்தை பகதூர் சிங் மீது கொலை வழக்கு பதியப்பட்டு, கைது செய்யப்பட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.