ஆமதாபாத் : ""நாட்டின் முதல் பிரதமர், நேருவை போல், குஜராத் முதல்வர், நரேந்திர மோடி மிகவும் பிரபலமானவர்,'' என, விஸ்வ இந்து பரிஷத் தலைவர், அசோக் சிங்கால் தெரிவித்துள்ளார். நாட்டின் அடுத்த பிரதமர் பதவிக்கு, பா.ஜ.,வில் பொருத்தமானவர் மோடி என்பது, அக்கட்சியின் பரவலான கருத்தாக உள்ளது. "தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் உள்ள நிலையில், அது பற்றி பேசி குழப்பம் ஏற்படுத்த வேண்டாம்' என, கட்சி தலைவர், ராஜ்நாத் சிங் கேட்டு கொண்ட பிறகும், கட்சியினர் யாரும் அதை கேட்பதாக இல்லை. இந்நிலையில், பா.ஜ.,வுடன் தோழமை கொண்ட, சங் பரிவார் அமைப்புகளில் ஒன்றான, விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர், அசோக் சிங்காலும், பிரதமர் வேட்பாளருக்கு, மோடி தான் பொருத்தமானவர் என கூறியுள்ளார். உ.பி., மாநிலம், ஆமதாபாத்தில் நடைபெற்று வரும், கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அசோக் சிங்கால் நேற்று கூறியதாவது: ஒட்டு மொத்தமாக, நாட்டின் அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்ட, முதல் பிரதமர், ஜவகர்லால் நேரு; அது போன்ற நிலை இப்போது முதல் முறையாக நிலவுகிறது. நாட்டின் அடுத்த பிரதமராக, குஜராத் முதல்வர், நரேந்திர மோடியே வர வேண்டும் என, மக்கள் விரும்புகின்றனர். அரசியலுக்காக, நாட்டில் அமைதியை கெடுக்க எங்கள் இயக்கம் ஒருபோதும் முயன்றதில்லை; அது எங்களது விருப்பமும் அல்ல. விஸ்வ இந்து பரிஷத், இந்து சமுதாய வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளது. இந்துக்களின் கனவை நனவாக்குவது பற்றியே விஸ்வ இந்து பரிஷத் செயலாற்றி வருகிறது. இவ்வாறு அசோக் சிங்கால் தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.