புதுடில்லி : பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது, சிறுமி அலறியதால், கோபமடைந்த கொடூரன், வாயில் இரும்பு கம்பியால் குத்தியதில், படுகாயமடைந்த சிறுமி, உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள். டில்லியின், லஜ்பத் நகர் பகுதியில், நேற்று முன்தினம் இரவு, 8:30 மணியளவில், வீட்டில் தனியாக இருந்த, ஒன்பதாம் வகுப்பு மாணவியை, "கேபிள் டிவி' கட்டணம் வசூலிக்க வந்த, அனில் குமார் என்பவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அந்த சிறுமி அலறி துடிக்கவும், அருகில் கிடந்த இரும்பு கம்பியை, சிறுமியின் வாயில் செருகி, கழுத்தை நெரித்துள்ளான். சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்ததும், அந்த கொடியவன் ஓடிவிட்டான்.
படுகாயமடைந்த சிறுமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள்; அவள், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. தப்பி ஓடிய அனில் குமார், பரிதாபாத் அருகே கைது செய்யப்பட்டான். அதுபோல், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், ஏழு வயது பழங்குடியின சிறுமியை, ஆகாஷ் என்ற, 19 வயது இளைஞன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். தப்பி ஓட முயன்ற அவனை போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேசத்தின் போபால் நகரில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, அதே பள்ளியின், 21 வயது ஆசிரியர், ஆகாஷ் சவுத்ரி, அடிக்கடி போன் செய்து, ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்துள்ளான். சில நாட்களுக்கு முன், வலுக்கட்டாயமாக அந்த சிறுமியிடம் மொபைல் போனை கொடுத்த, அந்த காம கொடூர ஆசிரியர், சிறுமி என்றும் பாராமல், பாலியல் தொடர்பாக அடிக்கடி பேசி தொந்தரவு செய்துள்ளார். பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆசிரியர் ஆகாஷ் கைது செய்யப்பட்டார். உத்தர்கண்டில், நான்காம் வகுப்பு மாணவியை, பள்ளி தலைமை ஆசிரியர், ஜகதம்பா பிரசாத், 59, பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி முடிந்த பிறகு, வீட்டுக்கு செல்ல இருந்த சிறுமி, மழைக்கு ஒதுங்கி நின்ற போது, தன் அறைக்கு அழைத்து, பாலியல் பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தின், தெற்கு, 24 பர்கானாவில், ஒன்பதாம் வகுப்பு மாணவியுடன் சென்ற சக மாணவனை தாக்கி, கயிற்றால் கட்டி, மாணவியை, நான்கு இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை நிகழ்ந்துள்ளது. மயங்கி கிடந்த மாணவி மற்றும் மாணவனை, கிராமத்தினர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கொடூர செயலை நிகழ்த்திய கும்பல் பற்றிய, அடையாளம் தெரியவில்லை.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.