pothu news | பண்ணை வீடு, சொகுசு ஓட்டல்...! வன அதிகாரியின் விஸ்வரூப ஊழல்| Dinamalar

பண்ணை வீடு, சொகுசு ஓட்டல்...! வன அதிகாரியின் விஸ்வரூப ஊழல்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

போபால் : மத்திய பிரதேசத்தில் பணியாற்றிய வனத் துறை அதிகாரியின் வீட்டில், "லோக் ஆயுக்தா' அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில், அவருக்கு, 40 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து இருக்கும் அதிர்ச்சி தகவல், அம்பலமானது. மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர், வசந்த் குமார் சிங். ம.பி., மாநில வனத் துறையில், தலைமை பாதுகாவல் அதிகாரியாக பணியாற்றுகிறார். ஆறு மாதங்களுக்கு முன், உஜ்ஜயினி பகுதிக்கு, மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு எதிராக, ஏராளமான ஊழல் புகார்கள் குவிந்தன. ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அமைப்பான, லோக் ஆயுக்தாவுக்கும், புகார்கள் வந்தன. இதையடுத்து, லோக் ஆயுக்தா அதிகாரிகள், உஜ்ஜயினி மற்றும் போபாலில் உள்ள, அவரது வீடுகளில், நேற்று அதிரடிச் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், அவருக்கு, 40 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பது, கண்டுபிடிக்கப்பட்டது. பெட்ரோல் பங்க், பண்ணை வீடு, அடுக்கு மாடி குடியிருப்பு, சொகுசு ஓட்டல், ஏராளமான நிலம் ஆகியவை, அவருக்கு சொந்தமாக இருப்பதும், ஏராளமான தொழில்களில், அவர் முதலீடு செய்திருப்பதும், வெளிச்சத்துக்கு வந்தது. இது தொடர்பாக, லோக் ஆயுக்தா அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வனத்துறை அதிகாரி, 40 கோடி ரூபாய் சொத்து குவித்துள்ள தகவல், ம.பி.,யில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
07-பிப்-201310:00:49 IST Report Abuse
GUNAVENDHAN சென்ற 25 ஆண்டுகளாக அரசு ஊழியராக பணியாற்றி வரும் இந்த நபருக்கு, இதுவரை அரசு சம்பளமாக கொடுத்த தொகை 80 லட்சம் ஆகும். 25 வருடங்களில் இவர் சம்பளமாக பெற்ற 80 லட்சத்தில், வீட்டு சிலவுகள் போக அதிகபட்சமாக மிச்சம் பிடித்து சேர்த்து வைத்து இருந்தால் 20 லட்சம் ரூபாய் அளவுக்கு சேர்த்து வைத்து இருக்க முடியும். ஒருவேளை நான் ஒரு பைசா கூட வீட்டு சிலவுக்கு பயன்படுத்தவில்லை, ஓசியிலேயே காலத்தை ஒட்டிவிட்டேன் என்று வாதத்துக்கு சொல்வதாக வைத்துகொண்டாலும் கூட, இவர் 80 லட்சம் ரூபாயை தான் சேமித்துவைத்து இருக்க முடியும். ஆனால் இவரது வீட்டை ரைட் செய்தபோது பிடிபட்ட சொத்து , நகை, பணம் எல்லாம் சேர்த்து 40 கோடி ரூபாய் என்று தினமலரில் செய்தி வந்துள்ளது. ஆனால் 80 கோடி ரூபாய் என்று ஆங்கில செய்திதாளில் செய்தி வந்துள்ளது. 40 கோடியோ , அல்லது 80 கோடியோ எதுவாக இருந்தாலும் இவர் தவறான வழிகளில் சேர்த்த சொத்து தான் என்பது கண்கூடாக தெரிகின்றது . ஒரு அரசு அதிகாரியே இப்படி கொள்ளையடித்தால் , மக்கள் நலனுக்காக சிலவிடவேண்டிய பணத்தையெல்லாம் ஒருசிலரே அமுக்கி கொண்டால் நாடு எப்படி உருப்படும்?. இத்தகைய suyanalavaadhigalidam iruundhu மொத்த panaththaiyum பறிமுதல் seydhu , velaiyai விட்டும் துரத்திவிட வேண்டும். இப்படிப்பட்ட ayyokkiyan வைத்துகொண்டு எந்த அரசும் மக்களுக்கு நல்லது seyyave mudiyaadhu. இத்தகைய adhigaarigalai சமூக விரோதிகள் பட்டியலில் serkkavum. ivanukkellaaam எந்த arasiyal vaadhiyaavadhu aadharavaaga vandhaal avanaiyum பிடித்து ulle podavum. idhilellaam thayavu thaatchanyam kaattakoodaadhu.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.