மும்பை : ஒரே நாளில், தவிர்க்க முடியாத, இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் இருந்தால், அவற்றில் ஏதாவது ஒன்றை புறக்கணிப்பது தான் பெரும்பாலானோரின் பழக்கம். ஆனால், மும்பை காங்கிரஸ் தொழிலதிபர், முசாபர் உசேன், களின் திருமணத்தையும், எம்.எல்.சி., வேட்பு மனுவையும், 4 மணி நேர இடைவெளியில், ஹெலிகாப்டர் உதவியுடன் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார்.மும்பை நகர காங்கிரஸ் கட்சியின், முக்கிய பிரமுகர்களில் ஒருவர், தொழிலதிபர், முசாபர் உசேன். இவரின் மகள், அப்ரீனுக்கு, கடந்த ஞாயிறு திருமணம் நடந்தது. சனிக்கிழமை இரவு, 12:00 மணிக்கு, டில்லி மேலிடத்திலிருந்து உசேனுக்கு போன் வந்தது."காலியாக உள்ள, எம்.எல்.சி., இடத்திற்கு, உங்களை நியமிக்க கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. மாநில சட்டசபையான விதான் பவனில், இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய, ஞாயிறு மதியம் 3:00 தான் கடைசி நேரம். வேட்பு மனுவை தாக்கல் செய்து விடுங்கள்' என, உத்தரவு வந்தது.மறுநாள் காலை, 11:00 மணிக்கு மகள் திருமணம். மதியம், 3:00க்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். திருமணம், மீரா ரோடு மசூதி அருகே; வேட்பு மனு தாக்கல், விதான் பவனில். இரண்டு இடத்திற்குள் இடைபட்ட தூரம், 45 கி.மீ., மும்பை நகர சாலைகளில், பகல் நேரத்தில், 45 கி.மீ., தூரத்தை கடக்க, குறைந்தபட்சம், 2 மணி நேரமாவது ஆகிவிடும். மகள் திருமணத்தையும் மாற்றி வைக்க முடியாது; கிடைத்த எம்.எல்.சி., வாய்ப்பையும் கைவிட முடியாது. என்ன செய்யலாம் என, யோசித்தவருக்கு, ஹெலிகாப்டர் நினைவுக்கு வந்தது. சனிக்கிழமை இரவு முழுவதும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், போன் செய்து, "திருமணத்திற்கு சீக்கிரமே வந்து விடுங்கள், பகல், 1:00 மணிக்கு, நான், எம்.எல்.சி., வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. எனவே, அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் வந்து விடுங்கள்' என, அன்பு கட்டளையிட்டார். அதன் படி திருமணம், பகல், 11:00 மணிக்கு நடந்தது. அருகிலேயே, விமரிசையான விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதியம், 1:00 மணி வரை, உறவினர்கள், நண்பர்களுடன் இருந்த உசேன், 5 நிமிட கார் பயண தூரத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டரில் ஏறி, 45 நிமிடங்களில், விதான் பவன் அருகில் இறங்கினார். பகல், 2:00 மணிக்கு கட்சி அலுவலகத்தில், முதல்வர், பிருத்விராஜ் சவான் மற்றும் கட்சி முன்னணியினர் வாழ்த்துகளை பெற்ற அவர், ஆதரவாளர்களுடன், அருகிலிருந்த விதான் பவனுக்கு சென்று, 2:30 மணிக்குள் வேட்பு மனுவை தாக்கல் செய்து விட்டார். எதிர்த்து யாரும் போட்டியிடாததால், அடுத்த சில நிமிடங்களில், எம்.எல்.சி.,யாக அறிவிக்கப்பட்டார். அங்கிருந்து, மீரா ரோட்டில் உள்ள தன் வீட்டுக்கு காரில், எம்.எல்.சி.,யாக புறப்பட்ட உசேனை, அவரின் வீட்டு வாசலில், மகளும், மருமகனும், உறவினர்களும், "எம்.எல்.சி., உசேன் வாழ்க' என கோஷமிட்டு வரவேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.