ஜம்மு
: ஒரு காலத்தில், காஷ்மீரில், பெரும் செல்வாக்குடன் வாழ்ந்த பண்டிட்டுகள்,
தற்போது, மிகவும் பரிதாபகரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தங்களுக்கான
உதவித் தொகையை, அதிகரிக்கும்படி, மத்திய அரசுக்கு, உருக்கமான வேண்டுகோள்
விடுத்துள்ளனர். காஷ்மீர் மாநிலத்தின் பூர்விக குடிகளைச் சேர்ந்த
பிராமணர்கள், பண்டிட்டுகள் என, அங்கே அழைக்கப்படுகின்றனர். இவர்கள், அங்கு,
பெரும் செல்வாக்குடன் வாழ்ந்து வந்தனர். காஷ்மீரில், பயங்கரவாதிகள்
ஆதிக்கம் அதிகரித்ததை அடுத்து, பண்டிட்டுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.
பயங்கரவாதிகளின் மிரட்டல் காரணமாக, ஏராளமான பண்டிட்டுகள், தங்கள்
முன்னோர்கள் வாழ்ந்த, காஷ்மீரை விட்டு, நாட்டின் பல மாநிலங்களுக்கும் இடம்
பெயர்ந்தனர். இவர்களில் சிலர், டில்லியில் வசிக்கின்றனர். மிக குறைந்த
அளவிலான பண்டிட்டுகளே, காஷ்மீரிலேயே, தங்கி வசிக்கின்றனர். நிலம், வீடு
மற்றும் வாழ்வாதாரங்களை முற்றிலும் இழந்த நிலையில், தங்கள் பூர்விக
பூமியிலேயே, அகதிகளைப் போல், இவர்கள், நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.
இவர்களுக்காக, மத்திய அரசு, மாதம் தோறும், 1,650 ரூபாய், உதவித் தொகை
அளித்து வருகிறது. வேறு வாழ்வாதாரங்கள் இல்லாத நிலையில், தங்களின் உணவு,
உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு, இந்த உதவித் தொகையைத்
தான், பண்டிட்டுகள் நம்பியுள்ளனர். இதுகுறித்து, காஷ்மீர் பண்டிட் சங்க
தலைவர், அஸ்வனி குமார் சுருங்கோ கூறியதாவது: இந்த உதவித் தொகையில், காலம்
தள்ளுவது, மிகவும் சிரமமாக உள்ளது. உணவுத் தேவையை நிறைவேற்றுவதற்கு கூட,
இந்த தொகை, போதவில்லை. இதனால், உதவித் தொகையை, கணிசமாக அதிகரிக்க, மத்திய
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த உதவித் தொகை, பலருக்கு முறையாக
கிடைப்பது இல்லை. ஏழு மாதங்களாக, பலருக்கு உதவித் தொகை வழங்கப்படவில்லை.
இந்த தொகையையும், மத்திய அரசு, உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு, அவர்
கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.