sambavam news | "செக்ஸ்' வழக்கில் ராஜ்யசபா துணை தலைவர் விசாரணை கோரி பெண்கள் போராட்டம்| Dinamalar

"செக்ஸ்' வழக்கில் ராஜ்யசபா துணை தலைவர் விசாரணை கோரி பெண்கள் போராட்டம்

Added : பிப் 07, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திருவனந்தபுரம் : மாணவி பாலியல் பலாத்கார வழக்கில், ராஜ்யசபா துணை தலைவர், பி.ஜே.குரியன் மீது மீண்டும் விசாரணை நடத்த கோரி, கேரள சட்டசபை முன், பெண்கள் அமைப்பினர் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இடுக்கி, சூர்யநெல்லி கிராமத்தை சேர்ந்த, ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ராஜ்சபா துணை தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான, பி.ஜே.குரியனும் சிக்கியுள்ளார். அவரை மீண்டும் விசாரிக்க வேண்டும் என, கேரளாவில் எதிர்க்கட்சியினர் வற்புறுத்தி வருகின்றனர். நேற்று காலை, திருவனந்தபுரத்தில், கேரள சட்டசபை வளாகம் முன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் அமைப்பான, இந்திய ஜனநாயக பெண்கள் சங்கத்தை சேர்ந்த, நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடி, கோஷம் எழுப்பினர். போராட்டத்தில், முன்னாள் அமைச்சர், ஸ்ரீமதி மற்றும் முன்னணி தலைவர்கள், சைலஜா, சீமா உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்கள் சட்டசபைக்குள் நுழைய முயன்றனர்; போலீசார் தடுத்து நிறுத்தினர். தள்ளுமுள்ளுவில் சிக்கி, பெண்கள் சிலர் காயமுற்றனர். நிலைமை மோசமாவதை அறிந்து, உள்ளே நுழைய முயன்ற பெண்களை போலீசார் கைது செய்து, போலீஸ் வாகனங்களில் ஏற்றினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போலீஸ் வாகனங்கள் முன் அமர்ந்து, பெண்கள் மறியலில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கைதானவர்கள், பின் விடுதலை செய்யப்பட்டனர். காயமடைந்தவர்களை, எதிர்க்கட்சி தலைவர், அச்சுதானந்தன், மருத்துவமனையில் பார்த்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை