சென்னை : ""தாழ்த்தப்பட்டோர் நல மாநில ஆணையம் அமைக்க, முதல்வர் ஜெயலலிதா முன்வர வேண்டும்,'' என, குடியரசு கட்சி எம்.எல்.ஏ., தமிழரசன் வலியுறுத்தினார்.சட்டசபையில், அவர் பேசியதாவது: தேசிய அளவில், தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் இயங்கி வருகிறது. இதேபோன்ற ஒரு ஆணையத்தை, தமிழக அளவில் அமைப்பதற்கு, முதல்வர் முன்வர வேண்டும். கேரளா, மகாராஷ்டிரா, உ.பி., - ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில், மாநில அளவில், இந்த ஆணையங்கள் இயங்கி வருகின்றன. தர்மபுரி கலவரங்களை, தேசிய ஆணையத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள், நேரில் வந்து பார்வையிட்டுச் சென்றனர். மாநில அளவில், ஒரு ஆணையம் இருந்தால், உடனடியாக, சம்பவ இடத்திற்குச் சென்று, சேத விவரங்களை ஆய்வு செய்து, விரைந்து நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும். பறை இசையை, பல ஆண்டுகளாக, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இசைத்து வரு கின்றனர். இத்தொழிலை, பரம்பரை, பரம்பரையாக, ஏராளமானோர் செய்து வருகின்றனர். பல்வேறு தொழில்களுக்கு, நல வாரியங்கள் இருக்கின்றன. அதேபோல், பறை இசை கலைஞர்களுக்கு என, தனி நல வாரியத்தை அமைக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தமிழரசன் பேசினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.