Advertisement
3,300 மெகா வாட், "‹ப்பர் கிரிடிக்கல்' அனல் மின்நிலையம்:செ#யூரில் அமைக்க, "டெண்டர்'
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2013,06:07 IST

சென்னை : "" தமிழகத்தில், 3300 மெகா வாட் திறன் கொண்ட, புதிய, "சூப்பர் கிரிட்டிக்கல்' அனல் மின் நிலையம் அமைக்க, முதல் யூனிட்டிற்கு, டெண்டர் கோரப்பட்டுள்ளது,'' என, தமிழக மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார். சட்டசபையில், கவர்னர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் கீழ், தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜா, தமிழகத்தின் மின் நிலைமை குறித்து பேசினார். அப்@பாது, தமிழக மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அளித்த விளக்கம்: தி.மு.க., ஆட்சி முடியும் போது, மின் உற்பத்திக்கும், தேவைக்கும் இடையில், 4,000 மெ.வா., இடைவெளி ஏற்பட்டது. ஆனால், அவர்கள் ஐந்தாண்டுகளில் அதிகப்படுத்திய மின் திறன், 206 மெ.வா., மட்டுமே. தொடர்ந்து, எந்த திட்டத்தையும் அவர்கள் விரைவு படுத்தவில்லை. தற்@பாது, மின் பிரச்னைக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம்; நாங்கள் பொறுப்பை தட்டிக் கழிக்கவில்லை. இந்த ஆண்டு, ஜூன் மாதத்திற்குள், மின் வெட்டு முழுமையாக நீக்கப்படும். தற்போது புதிய திட்ட்ஙகள் படிப்படியாக, செயல்படுத்தப்பட்டு வருகின்றன.மேட்டூரில், 600 மெகாவாட் திட்டம், உற்பத்தி துவங்கப்பட்டு, சிறிய தடங்கல் ஏற்பட்டது. தற்போது, மீண்டும் உற்பத்தி துவங்கியுள்ளது. வல்லூரில், 500 மெ.வா., முதல் அலகில் உற்பத்தி துவக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அலகில், மார்ச் மாதத்திலும், மூன்றாவது யூனிட்டில், ஆகஸ்டிலும் உற்பத்தி துவக்கப்படும். வடசென்னையில், 600 மெ. வா., திறன் கொண்ட இரண்டு அலகுகளில், முதல் அலகின் உற்பத்தி துவக்கப்பட்டுள்ளது. இரண்டாம் அலகின் உற்பத்தி விரைவில் துவக்கப்படும். செய்யூரில், தலா, 660 மெ.வா., வீதம் ஐந்து அலகுகள் மூலம், 3,300 மெ.வா., திறன் கொண்ட, சூப்பர் கிரிடிக்கல் அனல் மின் நிலையம் அமைப்பதற்கு, முதல் அலகிற்கான, ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. மற்ற அலகுகளுக்கான ஒப்பந்தம், இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும். இவ்வாறு அவர் பேசினார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Pannadai Pandian - wuxi,சீனா
07-பிப்-201311:25:52 IST Report Abuse
Pannadai Pandian சூப்பர். கீப் இட் அப். நிறைய பேருக்கு வயித்துல அமிலம் சுரக்கும் இப்ப. நல்லா ஜெலூசல் சாப்பிடுங்க.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.