pothu news | நகரமைப்பு துறையில், 42 சதவீத பணியிடங்கள் காலி:திட்ட அனுமதி பணிகள் முடக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நகரமைப்பு துறையில், 42 சதவீத பணியிடங்கள் காலி:திட்ட அனுமதி பணிகள் முடக்கம்

Added : பிப் 07, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

தமிழகம் முழுவதும் நகரமைப்புத் துறை அலுவலகங்களில், 42 சதவீத பதவியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், திட்ட அனுமதி வழங்குவது, விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பணிகள், முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை பெருநகர் பகுதி நீங்கலாக, தமிழகத்தின் பிற பகுதிகள் அனைத்திலும், கட்டுமான திட்டங்களுக்கான ஒப்புதல் அளிக்கும் அதிகாரம், நகரமைப்புத் துறையிடம் (டி.டி.சி.பி.,) அளிக்கப்பட்டுள்ளது. தமிழக நகரமைப்புத் துறையை பொறுத்தவரை, இதன் நிர்வாக பணிகளுக்காக, இயக்குனர், கூடுதல் துணை இயக்குனர் பதவி உள்ளது. இவர்கள் இருவரும், தலைமை அலுவலகத்தில் பணியில் இருப்பர்.
காலியிடங்கள் இவர்களுக்கு அடுத்தபடியாக, மண்டல அலுவலகங்கள், உள்ளூர் திட்டக் குழுமங்கள் ஆகியவற்றில், நிர்வாக முடிவுகள் எடுக்க வேண்டிய நிலையில், எட்டு இணை இயக்குனர் பதவிகளும், 14 துணை இயக்குனர் பதவிகளும் உள்ளன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, இப்பணியிடங்களை பூர்த்தி செய்வதில், அரசு தரப்பில் உரிய கவனம் செலுத்தப்படாததால், பெரும்பாலான பணியிடங்கள் தொடர்ந்து காலியாக உள்ளன. திட்ட அனுமதி வழங்குவதில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய நிலையில் உள்ள ஒரு கூடுதல் இயக்குனர், ஏழு இணை இயக்குனர், 14 துணை இயக்குனர் பதவியிடங்கள், கடந்த பல மாதங்களாக காலியாக உள்ளன. மேலும், 80 உதவி இயக்குனர்களில், 48 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதில், 36 பேர் பதவி உயர்வு மூலமும், 12 பேர், சில ஆண்டு களுக்கு முன் நடந்த, நேரடி தேர்வு மூலமும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இந்த, 12 பேர் தேர்வு செய்யப்பட்டது தொடர்பான பிரச்னையில் இன்னும் தீர்வு எட்டப்படாததால், இவர்களை உயர் பதவிகளுக்கு நியமிக்கவும் முடியவில்லை. ஆனால், உயர் அதிகாரிகள் பங்கேற்க வேண்டிய கூட்டங்களில், உதவி இயக்குனர் நிலையில் உள்ள அதிகாரிகளே பங்கேற்கின்றனர். இவர்களால், முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க முடியாத சூழல் நிலவுகிறது. மண்டல அலுவலகங்கள், உள்ளூர் திட்டக் குழுமங்களில் முக்கிய பதவிகளில், பொறுப்பு அதிகாரிகளாக உதவி திட்ட அதிகாரிகளே கவனித்து வருகின்றனர். திட்ட அனுமதி வழங்குவது, விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பணிகள் முடங்கியுள்ளன. 42 சதவீதம் காலி இது குறித்து, நகரமைப்புத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: மொத்தம் உள்ள, 801 பதவியிடங்களில், 339 பதவியிடங்கள், அதாவது, 42 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. அதிகாரிகள் பற்றாக்குறையால், திட்ட அனுமதி பணி பாதிக்கப்படாமல் இருக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில், உதவி இயக்குனர் நிலையில் மட்டுமே அதிகாரிகள் இருப்பதால், இவர்களை நேரடியாக இணை இயக்குனர், கூடுதல் இயக்குனராக நியமிக்க முடியாது. அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமே, இப்பதவிகளை நிரப்ப முடியும். இதற்கு அனுமதி கேருவது தொடர்பான கோப்புகள், அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அரசின் முடிவுக்காக காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


காலியிடங்கள் எவ்வளவு?


சில முக்கிய பதவிகளில் காலியிடங்கள் விவரம்:


பதவி அனுமதி காலியிடங்கள்


கூடுதல் இயக்குனர் 1 1


இணை இயக்குனர் 7 7


துணை இயக்குனர் 14 14


மூத்த ஆய்வு உதவியாளர் 8 2


திட்ட உதவியாளர் 27 09


- நமது நிருபர் -


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை