pothu news | இலங்கை தமிழர்களை கொன்றபோது தி.மு.க., மவுனியாக இருந்தது ஏன்?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இலங்கை தமிழர்களை கொன்றபோது தி.மு.க., மவுனியாக இருந்தது ஏன்?

Added : பிப் 07, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : ""இலங்கை அரசு, இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்தபோது, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த தி.மு.க., மவுனியாக இருந்தது ஏன்?'' என, பார்வர்டு பிளாக் எம்.எல்.ஏ., கதிரவன் கேள்வி எழுப்பினார்.சட்டசபையில், அவர் பேசியதாவது:இலங்கைத் தமிழர்களுக்காக, "டெசோ' கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இலங்கைத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது, மத்தியிலும், மாநிலத்திலும், தி.மு.க., ஆட்சி அதிகாரத்தில் இருந்தது.அப்போது, இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தாமல், தி.மு.க., மவுனியாக இருந்தது ஏன்? காவிரி தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியிட, தி.மு.க., வலியுறுத்தாதது ஏன்? பிரின்ஸ்-காங்கிரஸ்: காவிரி தண்ணீரை, தமிழகத்திற்கு திறந்துவிடுங்கள் என, பிரதமர் கூறினார். ஆனால், கர்நாடக அரசு தான் கேட்கவில்லை. தமிழக மக்கள் மீது அன்பு இல்லாமல், தண்ணீரை திறந்துவிடுங்கள் என, பிரதமர் கூறுவாரா என்பதை, எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். ராமலிங்கம்-பொதுப்பணித்துறை அமைச்சர்: பிரதமர் அறிவித்தார். செயல்படுத்தவில்லையே? இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை