Advertisement
இலவச வீட்டுமனை பட்டா காலவரம்பு நீட்டிக்கப்படுமா? அமைச்சர் தகவல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை : ""இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கான காலக்கெடு முடிந்தாலும், அதன் கால வரம்பை நீட்டிப்பு செய்ய, முயற்சிகள் நடந்து வருகின்றன. விரைவில், முதல்வர், உரிய முடிவை எடுத்து அறிவிப்பார்,'' என, வருவாய்த் துறை அமைச்சர் வெங்கடாசலம் கூறினார்.சட்டசபையில் நடந்த விவாதம்:பாலபாரதி - மார்க்சிஸ்ட்: இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான காலக்கெடு, கடந்த செப்டம்பருடன் முடிந்து விட்டது. ந்த தேதியை நீட்டிப்பு செய்ய, அரசு முயற்சிக்க வேண்டும். வெங்கடாசலம் - வருவாய்த் துறை அமைச்சர்: இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கான கால வரம்பை, நீட்டிப்பு செய்யும் எண்ணம் அரசிடம் உள்ளது. இது குறித்து, முதல்வர், உரிய முடிவை எடுத்து அறிவிப்பார்.பாலபாரதி: அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தால், அவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை என, கூறுகின்றனர். இந்ததிட்டம் ரத்து செய்யப்படும் என, ஏற்கனவே அ.தி.மு.க., வாக்குறுதி அளித்துள்ளதையும், அரசு ஊழியர், ஆசிரியர் சுட்டிக் காட்டுகின்றனர். சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும், 10 சதவீத பணம் எங்கு போகிறது என்றும், அவர்களுக்கு தெரியவில்லை. இந்த விவகாரத்தில், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதுள்ள திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பன்னீர்செல்வம் - நிதியமைச்சர்: பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், அனைத்து மாநிலங்களிலும், அமலில் உள்ளது. எனினும், இத்திட்டம், தமிழக அரசின் ஆய்வில் உள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.